• April
    05
    Sunday

Main Area

Main



இந்திய சுற்றுப் பயணம் மிகப்பெரும் வெற்றி – அமெரிக்க அதிபர் டிரம்ப் ட்வீட்

Trump India Visit
Trump India Visit

வாஷிங்டன்: இந்திய சுற்றுப்பயணம் மிகப்பெரும் வெற்றிகரமாக அமைந்தது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியாவில் இரு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த 24-ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். இதைத் தொடர்ந்து இரண்டு நாட்கள் இந்திய பயணத்தை முடித்துக் கொண்டு 26-ஆம் தேதி அவர் மீண்டும் அமெரிக்கா திரும்பினார்.

இந்த நிலையில், அமெரிக்கா சென்று சேர்ந்த பிறகு இந்திய சுற்றுப் பயணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் சில கருத்துகளை டிரம்ப் பகிர்ந்திருந்தார். அதில் அவர் கூறும்போது, “இப்போது தான் அமெரிக்காவில் தரையிறங்கினேன். இந்தியா சிறப்பாக இருந்தது. இந்திய சுற்றுப் பயணம் மிகப்பெரும் வெற்றிகரமாக அமைந்தது” என்று குறிப்பிட்டு உள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.