• April
    05
    Sunday

Main Area

Main



கொரோனா வைரஸை ஒடுக்க சீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்பும் இந்தியா

medicine
medicine

டெல்லி: கொரோனா வைரஸை ஒடுக்க இந்திய விமானம் மருந்து பொருட்களுடன் சீனாவின் வுகான் நகருக்கு செல்லவிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் காய்ச்சல் உலகம் முழுக்க பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தாக்குதலை உலக சுகாதார நிறுவனம் ‘சர்வதேச சுகாதார அவசர நிலை’ என்று அறிவித்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் காய்ச்சலுக்கு இதுவரை 1868 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை 72 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா வைரஸால் 98  பேர் உயிரிழந்து உள்ளனர்.

ttn

இந்த நிலையில், கொரோனா வைரஸை ஒடுக்க இந்திய விமானம் மருந்து பொருட்களுடன் சீனாவின் வுகான் நகருக்கு செல்லவிருப்பதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவுக்கு உதவி செய்வதாக இந்தியா ஏற்கனவே உறுதி அளித்துள்ளதை முன்னிட்டு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வார இறுதியில் சீனாவின் வுகான் நகருக்கு மருந்து பொருட்களுடன் இந்திய விமானம் செல்லவிருக்கிறது. இத்தகவலை சீனாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும் சீனாவில் இருந்து இந்திய விமானம் திரும்பி வரும்போது, இந்தியாவுக்கு திரும்ப விரும்பும் சீன இந்தியர்கள், இடவசதியை பொறுத்து விமானத்தில் அழைத்து வரப்படுவார்கள் என்றும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.