• August
    25
    Sunday

Main Area

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தின் போக்கினை நிர்ணயம் செய்யும்....

கடந்த வெள்ளிக்கிழமையன்று பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இது பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவான செய்தியாகும். இதன் தாக்கம் பங்கு வர்த்தகத்தில் எதிரொலிக்கும். வாகனம், ரியல் எஸ்டேட் மற்றும் வங்கி துறை நிறுவன பங்குகள் அதிகம் கவனிக்கப்படும்.

மும்பை பங்குச் சந்தை

அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தக போர் மீண்டும் தொடங்கி விட்டது. இரு நாடுகளும் இறக்குமதி பொருட்கள் மீதான வரியை உயர்த்தியதால் மீண்டும் வர்த்தக போர்  ஆரம்பித்து விட்டது. இது சர்வதேச பங்குச் சந்தைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன் எதிரொலி இந்திய பங்குச் சந்தைகளிலும் கேட்கும்.

பிமல் ஜலான் அறிக்கை தொடர்பாக நாளை நடைபெறும் ரிசர்வ் வங்கி இயக்குனர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. கடந்த ஜூன் காலாண்டின் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரம் வரும் வெள்ளிக்கிழமை வெளிவருகிறது. வரும் வியாழன் மாதத்தின் கடை வியாழக்கிழமை என்பதால் பங்கு முன்பேர வர்த்தக கணக்குகள் முடிக்கப்படும்.

பங்கு வர்த்தகம்

இதுதவிர, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு, அன்னிய முதலீட்டாளர்கள் நிலைப்பாடு, சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை மற்றும் உள்நாட்டு நிலவரங்கள் உள்ளிட்டவையும் இந்த வார வர்த்தகத்தின் போக்கினை முடிவு செய்யும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

subramani Sun, 08/25/2019 - 11:49
sensex share market forecast nifty பங்குச் சந்தை கணிப்பு நிப்டி சென்செக்ஸ் பங்கு வர்த்தகம் இந்தியா

English Title

share market forecast

News Order

0

Ticker

1 காஷ்மீர் மக்களின் உரிமைகள் மறுக்கப்படுவதாக கூறி ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜினாமா...

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில் பல முக்கிய துறைகளில் செயலாளராக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் கோபிநாதன். அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து விலக போவதாக கூறினார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடந்த 21ம் தேதி ஐ.ஏ.எஸ். பணியிலிருந்து விலகுவது தொடர்பாக ஆவணங்களை தாக்கல் செய்தேன். 

கண்ணன் கோபிநாதன் ஐ.ஏ.எஸ்.

கடந்த சில வாரங்களாக காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளதை எனது பதவி விலகலுக்கான காரணங்களில் ஒன்றாக குறிப்பிட்டுள்ளேன். 20 நாட்களாக காஷ்மீரில் லட்சக்கணக்கான மக்களின் அடிப்படை உரிமைகள் ரத்து செய்யப்பட்டது. இதற்கு பெரும்பான்மை இந்தியா ஆதரவாக உள்ளது. 2019ல் இந்தியாவில் இது நடைபெறுகிறது. 

சிறப்பு உரிமை ரத்து செய்யப்பட்டது பிரச்சினை அல்ல. அதனை வரவேற்பதற்கும், எதிர்ப்பதற்கும் குடிமக்களுக்கு உரிமை மறுக்கப்படுகிறது என்பதுதான் பிரச்சினை. அதனை வரவேற்பதும், எதிர்ப்பதும் அவர்களது அடிப்படை உரிமை. என் ராஜினாமாவால் எதுவும் நடக்கபோவதில்லை. ஆனால் ஒவ்வொருவருக்கும் சொந்தமாக மனசாட்சி இருக்கிறது அதற்கு பதில் அளிக்க வேண்டும் என நினைக்கிறேன். இவ்வாறு தெரிவித்து இருந்தார்.

கண்ணன் கோபிநாதன்

தாத்ரா மற்றும் நகர் ஹவேலி யூனியன் பிரதேசத்தில், நஷ்டத்தில் இயங்கி வந்த அரசுக்கு சொந்தமான மின் விநியோக நிறுவனத்தை லாப பாதைக்கு மாற்றி காட்டியவர் கண்ணன் கோபிநாதன் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், கடந்த ஆண்டு கேரள வெள்ளத்தின் போது தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பதை காட்டி கொள்ளாமல் நிவாரண  பணிகளை மேற்கொண்டது கண்ணன் கோபிநாதனை வெளிஉலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டியது. 2012 பேட்ச் ஐ.ஏ.எஸ். அதிகாரியான கோபிநாதன் பதவிக்கு வந்த 7 ஆண்டுகளில் பதவியை ராஜினாமா செய்து இருப்பது பலருக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

subramani Sun, 08/25/2019 - 11:14
IAS officer Kannan Gopinathan Dadra and Nagar Haveli kashmir issue கண்ணன் கோபிநாதன் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி காஷ்மீர் விவகாரம் கண்ணண் கோபிநாதன் இந்தியா

English Title

IAS Officer Quits for Restrictions In J&K

News Order

0

Ticker

1 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார இலக்கு சாத்தியம்தான்...... பிரணாப் முகர்ஜி தகவல்...

கொல்கத்தாவில் நேற்று நிறுவன ஆலோசகர்கள் மற்றும் செயல்அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்து இருந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், முன்னாள் குடியரசு தலைவருமான பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: 2024-25ம் நிதியாண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலம் என்ற இலக்கு சாத்தியமானதுதான். விவேகமான நிதி மேலாண்மை வாயிலாக அதனை எட்டமுடியும்.

பொருளாதார வளர்ச்சி

இலக்கை அடைய தேவையான பொருளாதார வளர்ச்சி பணவீக்கத்தால் குறைக்கப்பட வேண்டும் மற்றும் தற்போது மாற்று வீதத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். அதிக வரிகளுக்கு பதிலாக சரக்குகள் மற்றும் சேவைகள் வரி (ஜி.எஸ்.டி.) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் அதில் மத்திய அரசிடமிருந்து இன்னும் அதிக தெளிவு தேவை.

ஜி.டி.பி.

கடந்த ஆண்டு முதல் பொருளாதாரத்தில் மந்தநிலைக்கான அறிகுறிகள் தென்படுகிறது. அதனால் பொருளாதார வளர்ச்சி குறைகிறது. கடந்த சில ஆண்டுகளாக நிறுவன மோசடிகள் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. மேலும் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
 

subramani Sun, 08/25/2019 - 10:02
pranab mukherjee $s trillion economy india gdp 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரம் பிரணாப் முகர்ஜி இந்தியாவின் ஜி.டி.பி. பிரணாப் முகர்ஜி இந்தியா

English Title

$5 trillion economy is possible says pranab mukherjee

News Order

0

Ticker

1 காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்தை நீக்கிய பிறகு குறைந்த கல் வீச்சு சம்பவங்கள்.....

கடந்த 5ம் தேதி காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. மேலும், அன்றைய தினமே மாநிலங்களவையில் ஜம்மு அண்டு காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 மசோதாவை நிறைவேற்றியது. அதற்கு அடுத்த நாள் மக்களவையில் அந்த மசோதாவை நிறைவேற்றியது. மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன், காஷ்மீரில் அரசியல் தலைவர்களை காவலில்  வைத்தது. பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.

பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீச்சு தாக்குதல்

காஷ்மீரில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை காஷ்மீர் அரசு நிர்வாகம் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தி வருகிறது. இந்நிலையில் சிறப்பு அந்தஸ்து நீக்கிய பிறகு அங்கு போலீஸ் மற்றும் துணை ராணுவ படைவீரர்கள் மீது போராட்டக்காரர்கள் அடிக்கடி நடத்தி வந்த கல் வீச்சு சம்பவங்கள் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கல் வீச்சு தாக்குதல்

காஷ்மீரில் கடந்த 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை சுமார் 250 கல் வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. இதில் அதிகம் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் அதிகம் இல்லாத ஸ்ரீநகரில் நடந்து இருப்பதுதான் ஆச்சரியம்.  ஸ்ரீநகரில் 220 கல்வீச்சு சம்பவங்கள் அரங்கேறி உள்ளது. குறிப்பாக வெள்ளிக்கிழமைகளிலும், சுதந்திர தினத்தன்றும் அதிகளவில் கல்வீச்சு சம்பவங்கள் நடந்தது.

அதேசமயம் தீவிரவாத நடவடிக்கைகள் அதிகம் காணப்படும் புல்வாமாவில் வெறும் 6 கல் வீச்சு சம்பவங்கள் மட்டுமே நடந்துள்ளது. 6 முதல் 22ம் தேதி வரை நடைபெற்ற  கல் வீச்சு சம்பவங்களில் 7  சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் அடைந்தனர். 25 பாதுகாப்பு படை வாகனங்கள் சேதமடைந்ததாக தகவல்.


 

subramani Sun, 08/25/2019 - 09:17
kashmir issue stone pelting crpf persons injured கல் வீச்சு சம்பவங்கள் காஷ்மீர் விவகாரம் சி.ஆர்.பி.எப். வீரர்கள் காயம் பாதுகாப்பு படை வீரர்கள் மீது கல் வீச்சு தாக்குதல் இந்தியா

English Title

after withdraw J&K’s special status, stone-pelting incidents in the Valley have down

News Order

0

Ticker

1 இந்திய கடல் எல்லையில் பாகிஸ்தான் படகுகள்.... பி.எஸ்.எப். வீரர்கள் தீவிர தேடுதல் வேட்டை...

குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தின் அருகே ஹராமி நாலா கடற்கழிமுக பகுதி உள்ளது. இந்தியா-பாகிஸ்தான் கடல் எல்லை பகுதியில் அமைந்துள்ள இந்த பகுதி ஆழமற்ற மற்றும் சாந்தமான நீர்பகுதியாகும். நேற்று காலை 6.30 மணி அளவில் எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.

பாகிஸ்தான் படகு

அப்போது ஒற்றை என்ஜின் கொண்ட 2 பாகிஸ்தான் மீன்பிடி படகுகள் மட்டும் அந்த பகுதியில் தனியாக நிற்பதை அவர்கள் பார்த்தனர். இதனையடுத்து அந்த படகுகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இருப்பினும் சந்தேகத்துக்குரிய அளவில் எந்த பொருட்களும் அதில் கிடைக்கவில்லை. இதனையடுத்து அந்த பகுதியில் எல்லை பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தான் படகு

கடந்த மே மாதத்தில் இந்த பகுதியில் நுழைந்த பாகிஸ்தான் படகை பாதுகாப்பு படை வீரர்கள் சிறைபிடித்தனர். அப்போது அந்த படகில் இருந்த பாகிஸ்தான் மீனவர் கடலுக்குள் குதித்து தப்பியோடியது குறிப்பிடத்தக்கது. 

subramani Sun, 08/25/2019 - 06:51
bsf harami nala pakistani boats பி.எஸ்.எப். ரோந்து பணி ஹராமி நாலா பாகிஸ்தான் படகுகள் ரோந்து பணியில் பி.எஸ்.எப். இந்தியா

English Title

Pakistani boats abandoned in Harami Nala- bsf search operation

News Order

0

Ticker

1 மறைந்த அருண் ஜெட்லியின் இறுதி சடங்கு இன்று மதியம் நடைபெறுகிறது....

பா.ஜ.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண் ஜெட்லி தனது 66 வயதில் உடல் நலம் குறைவால் நேற்று காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்த அருண் ஜெட்லி நேற்று மருத்துவ சிகிச்சை பலன் இன்றி காலமானார். மறைந்த அருண் ஜெட்லியின் உடல் தற்போது அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த்

அடுத்த சில மணி நேரத்தில் அருண் ஜெட்லியின் உடல் பா.ஜ. தலைமை அலுவலகத்துக்கு எடுத்து செல்லப்பட்டு அஞ்சலி செலுத்துவற்காக வைக்கப்பட உள்ளது. அங்கு ஏராளமான தலைவர்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் அருண் ஜெட்லியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளனர். பின் பிற்பகலில் நிகம்போத் காட்டுக்கு அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு உடல் தகனல் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த், உள்துறை அமைச்சர் அமித் ஷா, பா.ஜ. மூத்த தலைவர் எல்.கே. அத்வானி உள்பட ஏராளமான தலைவர்கள் நேற்று அருண் ஜெட்லியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 2 வாரங்களுக்கு முன்புதான் முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் காலமானார். இந்நிலையில் அருண் ஜெட்லியின் மறைவு நிகழ்வு பா.ஜ.வுக்கு பெரும் இழப்பாக அமைந்துள்ளது.

subramani Sun, 08/25/2019 - 05:40
arun jaitley death jaitley cremation Nigambodh Ghat அருண் ஜெட்லி மறைவு அருண் ஜெட்லி உடல் தகனம் நிகம்போத் காட் அருண் ஜெட்லி இந்தியா

English Title

Arun Jaitley will be cremated on today afternoon at the Nigambodh Ghat

News Order

0

Ticker

1 பாதியில் வர வேண்டாம்.. மோடியிடம் வலியுறுத்திய அருண் ஜெட்லி குடும்பம்...

பா.ஜ.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான அருண் ஜெட்லி உடல் நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த 2 வாரங்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று காலையில் சிகிச்சை பலன் இன்றி இறைவனடி சேர்ந்தார். அவரது மறைவுக்கு குடியரசு தலைவர், பிரதமர், மத்திய அமைச்சர்கள் மற்றும் இதர கட்சி தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அருண் ஜெட்லி

பிரதமர் நரேந்திர மோடி தற்போது 3 நாடுகள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். நேற்று மோடி அபுதாபியில் இருந்த போதுதான் அவருக்கு அருண் ஜெட்லி மறைவு தகவல் சென்றது. இதனையடுத்து அவர் உடனடியாக, அருண் ஜெட்லியின் மனைவி சங்கீதா மற்றும் அவரது மகனிடம் தொலைப்பேசியில் பேசி தனது இரங்கலை தெரிவித்தார்.

அத்வானி

அப்போது அருண் ஜெட்லி மனைவியும், மகனும், உங்க 3 நாள் வெளிநாட்டு பயணத்தை இதற்காக பாதியில் முடித்து கொண்டு திரும்ப வேண்டாம் என பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக தற்போது தகவல் வந்துள்ளது. பிரதமர் மோடி தனது 3 நாடுகள் (பிரான்ஸ், ஐக்கிய அரபு அமீரகம், பக்ரைன்) பயணத்தை முடித்து விட்டு நாளை இந்தியா திரும்புகிறார்.

subramani Sun, 08/25/2019 - 05:25
arun jaitley dead 3 nation visit Modi அருண் ஜெட்லி மறைவு அருண் ஜெட்லி குடும்பம் மோடியின் வெளிநாட்டு பயணம் பிரதமர் மோடி இந்தியா

English Title

Arun Jaitley’s family asks PM, to not cancel 3 nations tour

News Order

0

Ticker

1 ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம்! சென்செக்ஸ் 649 புள்ளிகள் வீழ்ச்சி! இதுதான் இந்த வார பங்கு வர்த்தக நிலவரம்....

நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் பின்னடைவு, சர்வதேச பொருளாதார மந்தநிலை ஏற்படும் என அச்சம், வாகனங்கள் விற்பனையில் தொடர்சரிவு போன்றவை இந்திய பங்குச் சந்தைகளின் சரிவுக்கு காரணமாக அமைந்தது. மேலும் சர்வதேச நிலவரங்களும் பங்கு வர்த்தகத்துக்கு ஆதரவாக அமையவில்லை. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ச்சி கண்டது. அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக போர் போன்றவையும் இந்திய சந்தைகளின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது. 

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு  ரூ.137.92 லட்சம் கோடியாக சரிந்தது. அதாவது கடந்த 5 வர்த்தக தினங்களில் முதலீட்டாளர்களுக்கு ரூ.2.81 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டது. கடந்த 16ம் தேதி பங்கு வர்த்தகம் முடிவடைந்த பிறகு நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.73 லட்சம் கோடியாக இருந்தது.

இந்த வார பங்கு வர்த்தகத்தில் ஒட்டு மொத்த அளவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 649.17 புள்ளிகள் குறைந்து 36,701.16 புள்ளிகளில் நிலை கொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு நிப்டி 218.45 புள்ளிகள் சரிந்து 10,829.35 புள்ளிகளில் முடிவுற்றது.

subramani Sat, 08/24/2019 - 15:03
sensex இந்தியா

English Title

this week share market review

News Order

0

Ticker

1 பேங்க்கை ஏமாத்துனதைகூட மன்னிச்சுடுவேன்யா, ஆனா பழைய 1000 நோட்டை இன்னும் வச்சிருந்தபாரு....!

டெக்கான் கிரானிக்கிள் ஆங்கில இதழின் சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குநரான வெங்கட்ராம் ரெட்டியின் ஐதராபாத் சொகுசு மாளிகையில் அமலாக்கத்துறை திடீர் ரெய்டு விட்டது. டெக்கான் கிரானிக்கிள் வியாபாரம் பிச்சுக்கிட்டு போகுது, விளம்பர வருமானம் கொட்டுகிறது என பொய் கணக்கு காட்டி வங்கிகளிடமிருந்து 2000 கோடிக்கும்மேல் கடன் வாங்கி, அந்தப்பணத்தை வைத்து டெக்கான் சார்ஜர்ஸ் ஐ.பி.எல். அணியை வாங்கியது, சொத்துக்கள் குவித்த வழக்கு நடவடிக்கையாக அமலாக்கத்துறை இந்த ரெய்டை நடத்தியது. டெக்கான் கிரானிக்கிள் வளர்ச்சிக்காக வாங்கிய நிதியை வைத்துக்கொண்டு வாங்கிய சொத்துக்களுக்கான ஆதாரங்கள் சிக்கியதுகூட அதிகாரிகளுக்கு ஆச்சர்யத்தை தரவில்லை. 2016 நவம்பர் திங்கள் 8ஆம் நன்னாளில் செல்லாது என அறிவிக்கப்பட்ட பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் மொத்தம் 5 லட்சத்திற்கு மறைத்துவைக்கப்பட்டு இருந்ததும் ரெய்டில் கண்டுபிடிக்கப்பட்டது. பழைய ரூபாய் நோட்டுகளை குறித்த காலத்திற்குள் மாற்றிக்கொள்ளவேண்டும், அதன்பிறகு 5000 வரைக்கும் ஞாபகார்த்தமாக வைத்துக்கொள்ளலாம், அதற்கும்மேல் வைத்திருந்தால் சட்டநடவடிக்கை என அரசு அறிவித்து மூன்று வருடங்கள் ஆகப்போகிறது. இனிமேல் அதனை வைத்திருந்தாலும் பிரயோசனமில்லை. இப்போது வங்கிகளை ஏமாற்றிய வழக்குப்போக, பழைய செல்லா காசை வைத்திருந்த செல்லாக்கேசும் கூடவே வந்துவிட்டது.

gunaseelan Sat, 08/24/2019 - 11:32
ED raids Deccan Chronicle group chairman’s house and finds demonetized notes worth Rs.5 lakh இந்தியா

English Title

ED raids Deccan Chronicle group chairman’s house and finds demonetized notes worth Rs.5 lakh

News Order

0

Ticker

1  பருப்பு, சமையல் எண்ணெய் பதுக்கினால் கடும் நடவடிக்கை.....மத்திய அரசு எச்சரிக்கை

வெங்காயம் அதிகம் உற்பத்தியாகும் மகாராஷ்ரா, கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளத்தால் வெங்காய சப்ளை நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் வெங்காய விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. இதனையடுத்து மத்திய நுகர்வோர் துறை அமைச்சகம் வெங்காய விலை உயர்வு குறித்து கண்காணிக்க தொடங்கியது. மேலும், சப்ளை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டது. மேலும் வெங்காய சப்ளையை அதிகரிக்க பப்பர் கையிருப்பிலிருந்து வெங்காயம் சப்ளை செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் டிவிட்டரில், கடந்த சில நாட்களாக பருப்புகள், சமையல் எண்ணெய் விலை உயர்வை மத்திய அரசு கண்காணித்து வருகிறது. பதுக்கல்காரர்கள் செயற்கையாக பற்றாக்குறையை ஏற்படுத்தியதே இதற்கு காரணம். அரசு அவர்களுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்கும். பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போதுமான அளவில் மத்திய அரசிடம் கையிருப்பு உள்ளது. என பதிவு செய்து இருந்தார்.

பொருளாதார மந்த நிலைக்கு மத்திய அரசுதான் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், வெங்காயம், பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவது மத்திய அரசு கடும் நெருக்கடியை கொடுத்துள்ளது.

subramani Sat, 08/24/2019 - 08:48
ram vilas paswan இந்தியா

English Title

The government will take immediate action against hoarders says ram vilas paswan

News Order

0

Ticker

1         
2018 TopTamilNews. All rights reserved.