• February
    26
    Wednesday

Main Area

Main



முடங்கி கிடக்கும் கோவை வடக்கு எம்.எ.ஏ?. வெளியேறத் திட்டமா..!

eps-vs-prg-arunkumar
eps-vs-prg-arunkumar

கோவை வடக்கு எம்.எல்.ஏவாக இருப்பவர் பி.ஆர்.ஜி அருண் குமார். கோவை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் அவர்தான். சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் இவர் கலந்து கொள்ளவே இல்லை. இவரது தொகுதிக்குட்பட்ட பகுதியில் அரசின் வளர்ச்சிதிட்டப் பணிகள் எதுவுமே நடப்பதில்லையாம்.

அருண்குமாரின் ஆதரவாளர்கள் என்ன பொங்கியும் மேலிடத்தில் எந்த ரியாக்‌ஷனும் இல்லையாம்.அருண்குமாரின் தந்தை சாவுக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக வந்தார். அப்போதும் கூட அருண்குமார் அவருடன் பெரிதாக முகம் காட்டவில்லையாம். அதேபோல ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் யாரையும் எம்.எல்.ஏ சந்திப்பதில்லையாம். 

eps-pay-tribute

எடப்பாடியார் பதவிக்கு வந்ததிலிருந்து கோவை தன் முக்கியத்துவத்தை இழந்துவிட்டது, அதில்தான் அருண்குமாருக்கு வருத்தம் என்றும், கோவை மேயர் பதவியை பிஜேபிக்கு கொடுக்க அதிமுக முடிவு செய்து விட்டது, அது மாநகர மாவட்டச் செயலாளர் என்கிற வகையில் அருண்குமாருக்குப் பிடிக்கவில்லை என்றும் அவரது ஆதரவாளர்கள் ஆளாலுக்கு காரணங்களை அடுக்குகிறார்கள். 

ஆனால், அருண்குமாரோ எதைப்பற்றியும் கவலைப்படாமல் முடங்கிக் கிடக்கிறார். அவர் கட்சிப் பணிகளில் ஆர்வம் காட்டுவதே இல்லை. அவரிடம் இருந்து மாநகர் மாவட்டச் செயலாளர் பதவியை வேறு யாருக்காவது மாறித்தர வேண்டும் என்று இப்போதே குரல்கள் ஒலிக்கத் துவங்கிவிட்டன.

இதெல்லாம் காரணமில்லை அவர் அதிமுகவில் இருந்து முகாம் மாற முடிவுசெய்து விட்டார், மாநகராட்சித் தேர்தலுக்கு முன்பு அறிவிப்போ, அல்லது ஒரு முன்னெடுப்போ நடக்கும் என்றும் அதிமுகவிலேயே பேச்சிருக்கிறது.

2018 TopTamilNews. All rights reserved.