• March
    31
    Tuesday

Main Area

Main



'அதுல நான் ரொம்ப ஃபேமஸ்'.. மூதாட்டிகளைக் குறிவைத்த வட மாநிலத்தவர் : மடக்கிப் பிடித்த போலீசார்!

அமோல்பாலசாஹே சிண்டே
அமோல்பாலசாஹே சிண்டே


சமீப காலமாகச் சென்னையில் அதிகமாக செயின் பறிப்பு நடந்து வருவதால், புகார்கள் குவிந்த வண்ணம்  உள்ளன. இதனால் அத்தகைய செயல்களில் ஈடுபடும் நபர்களைப் பிடிக்கத் தீவிரமாக ஈடுபட்ட போலீசார், செயின் பறிப்பு நடந்த இடங்களிலிருந்த சிசிடிவி காட்சிகளைச் சோதனை செய்து பார்த்தனர். அதில், ஒரு நபர் டிப் டாப்பாக உடை அணிந்து கொண்டு பைக்கில் சென்று செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்ததையும் அவர் வடமாநிலத்தவர் என்பதையும் கண்டு பிடித்தனர். 

ttn

இதனையடுத்து அவரின் புகைப்படத்தை வட மாநில காவல்துறைக்கு அனுப்பி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் தெலுங்கானா காவல்துறை கொடுத்த தகவலின் படி அவர் பெயர் அமோல்பாலசாஹே சிண்டே என்றும் அவர் மீது மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 25க்கும் மேற்பட்ட செயின் பறிப்பு வழக்குகள் பதிவாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். இது மட்டுமில்லாமல் அவர் திருடுவதற்காகச் சென்னை வந்து, திருடி முடித்த உடன் மீண்டும் விமானத்தில் தனது சொந்த ஊருக்குச் சென்று வருவதும் கண்டு பிடிக்கப்பட்டது. 

ttn

இந்த தகவலை வைத்துக் கொண்டு அவரை நோட்டமிட்டு வந்த போலீசார், அவரை சென்னையில் கைது செய்துள்ளனர். அதன் பின்னர் அவரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில்,  "மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் நான் மிகவும்  ஃபேமஸ் ஆகிவிட்டேன். தெலுங்கு, தமிழ் பேசும் பெண்கள் அதிகமாக நகை அணிவார்கள் என்று கேள்விப் பட்டிருந்தேன். அதனால் தான் சென்னைக்கு வந்தேன். திருடுவதற்காகத் தான் மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களுக்குச் சென்றேன்" என்று தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.