• August
    26
    Monday

Main Area

Main



அரசு பள்ளியில் சேர்த்தால் ரூ.15 ஆயிரம் பரிசு | முதல்வர் அதிரடி!

ஜெகன்மோகன் ரெட்டி
ஜெகன்மோகன் ரெட்டி
Loading...

தமிழ் நாட்டைத் தவிர மற்ற எல்லா மாநிலங்களிலும், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக கொஞ்சமாவது அதன் முதல்வர்கள் பாடுபடுகிறார்கள். அதிலும், தெலுங்கானா, ஆந்திரா எல்லாம் வேற லெவல். அதிரடியாய், ‘குழந்தைகளை அரசு பள்ளிகளுக்கு அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டு தோறும் ரூ.15 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும்’ என்று அறிவித்திருக்கிறார் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி.

jaganmohan reddy

ஏற்கெனவே, வீடு தேடி ரேஷன் பொருட்கள் வரும் என்று அறிவித்து, மக்களின் பாராட்டுக்களைப் பெற்றவர் ஜெகன் மோகன் ரெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திரா சட்டசபை தேர்தலில் அபார வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ரே‌ஷன் பொருட்கள் வீடு தேடி நேரடியாக வரும் என்ற அறிவிப்பிற்கு பொதுமக்களிடையே பலத்த வரவேற்பு எழுந்துள்ளது.  இதற்கிடையே கல்வியில் ஆந்திர மாநிலம் 100 சதவீதம் அடைய வேண்டும் என்று பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் ஜெகன்மோகன் ரெட்டி.
இதன் தொடர்ச்சியாக, ‘ராஜண்ணாபடி பாட்டா’ என்று புதிய கல்வி திட்டத்தை நேற்று தொடங்கி வைத்தார்.  குண்டூரில் உள்ள அரசு பள்ளியில், குழந்தைகளுக்கு எழுத்து கற்பிக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெகன்மோகன், அப்பொழுது, குழந்தைகளின் கையை பிடித்து எழுத்துகளை எழுத கற்று கொடுத்தார்.

jaganmohan reddy

ஆந்திர மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பல புதிய திட்டங்களை அறிவிக்க இருப்பதாகவும், அதன் தொடர்ச்சியாக ஆந்திராவில் பெரிய அளவில் கல்விப் புரட்சியை கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார். இன்னும் 2 ஆண்டுகளில் ஆந்திரா முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கப் போவதாகவும் தெரிவித்தார் ஜெகன் மோகன்.  வரும் குடியரசு தினத்தில் இருந்து, அரசு பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோருக்கு ஆண்டு தோறும் ரூ.15 ஆயிரம் ஊக்கப்பரிசு வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.

2018 TopTamilNews. All rights reserved.