• October
    15
    Tuesday

Main Area

Main



கிரேஸி மோகனை ரொம்ப மிஸ் பண்றீங்களா...அப்ப இந்த நியூஸ் உங்களுக்குத்தான்...

கிரேஸி மோகன்,கமல்
கிரேஸி மோகன்,கமல்

மறைந்த கிரேஸி மோகன் நினைவாக நடத்தப்படும் நாடகம் ஒன்றில் அவரது நட்பை கவுரவிக்கும் வகையில் நாடகத்தில் சிறிய காட்சி ஒன்றில் நடிக்கிறார் உலகநாயகன் கமல்ஹாசன்.

crazymohan

நாடக இயக்குநர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகம் கொண்ட கிரேஸி மோகன் தனது 66 வது வயதில் கடந்த திங்களன்று மாரடைப்பால் காலமானார். அவரது இறுதிச் சடங்கில் கமல் உட்பட தமிழ்த் திரையுலக நட்சத்திரங்கள் பலரும் பங்கேற்றனர்.

அவரது நினைவைப்போற்றும் வகையில் கிரேஸி மோகன் அஞ்சலிக்கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்ய கமலை அணுகிய நிலையில், கிரேஸி மோகனுக்கு ஒரு நாடகம் நிகழ்த்தி அஞ்சலி செலுத்துவதே சரியாக இருக்கும் என்று கமல் சொன்னதாகவும் அந்த நாடகத்தில் தானும் ஒரு காட்சியில் கமல் தோன்ற விரும்பியதாகவும் தெரிவித்திருக்கிறார்.

crazymohan

கமலின் இந்த யோசனையால் நெகிழ்ந்த கிரேஸி மோகன் குழுவினர் வரும் ஜூன் 30ம் தேதி நாரதகான சபாவில் ‘கிரேஸி பிரிமியர் லீக்’ என்ற நாடகத்தை நடத்த முடிவு செய்து அதற்கான விளம்பரங்களையும் தயார் செய்துவிட்டனர். இந்த நாடகத்தில் கிரேஸி மோகனின் பழைய நாடகங்களின் மறக்கமுடியாத காட்சிகள் தொகுப்பாக வழங்கப்படும். கமல், இயக்குநர் மவுலி தொடங்கி தமிழ் சினிமாவில் கிரேஸி மோகனுடன் பணியாற்றிய அத்தனை கலைஞர்களும் இந்நிகழ்ச்சியில் பங்குகொள்வார்கள் என்று தெரிகிறது.

2018 TopTamilNews. All rights reserved.