• February
    26
    Wednesday

Main Area

Main



இரவில் இதை செய்தால் உங்கள் முகம் பளபளப்பாகும்!இரவு நேர சரும பாதுகாப்பு டிப்ஸ்!

tridha
tridha

சருமத்தை நன்கு கவனித்துக்கொள்ளுவது மிகவும் முக்கியம் அதுவும் இரவுநேரங்களில் சருமத்தை நன்கு பார்த்துக்கொள்ள வேண்டும். உடல் நலனை மட்டும் பார்த்துக்கொண்டால் போதாது சரும பராமரிப்பும் மிக அவசியம். உங்கள் முகத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்குவதற்கு நீங்கள் தினமும் உங்கள் சருமத்தை கவனித்துக்கொண்டாலே போதும். முக்கியமாக தினமும் இரவில் சருமத்திற்கு தேவையான முறைகளை செய்யவேண்டும். 

man

ஏன் இரவு நேரம்?

இரவு நேரம் தான் சருமம் தன்னை சீரமைத்துக்கொள்ளும், மேலும் இரவில் தான் செல்கள் புதுப்பிக்கும் அப்போதுதான் முகம் பொலிவு பெரும்,ஸ்ட்ரெஸ்ஸினால் முகத்தில் காணப்படும் வயதான தோற்றம், சுருக்கங்கள்,ஆகியவை மறைந்து சருமம் ஆரோக்கியமானதாக மாறும். மேலும் இரவில் தூங்குவதற்கு முன்பாக சில பராமரிப்பு முறைகளை பின்பற்றுவது மிகவும் முக்கியம் அவையே முகத்தை சீராக வைக்கும். 

skin

இரவில் முக்கியமாக நீங்கள் செய்யவேண்டியவை இதோ...

1.மேக் அப் அகற்றுதல்:

இரவில் தூங்குவதற்குமுன் கண்டிப்பாக உங்கள் முகத்தில் நீங்கள் போட்டிருக்கும் மேக் அப்-ஐ கண்டிப்பாக அகற்ற வேண்டும். இல்லையென்றால் அது உங்கள் முகத்தில் தங்கி சருமத்திலுள்ள சிறிய துவாரங்களில் புகுந்து அடைபட்டு காலப்போக்கில் அவை முகப்பருக்களாக உருவெடுக்கும்.

skin

இதுவே உங்கள் முகத்தை நீங்களே சீர்கெடுத்துவிடுவதற்கு சமம். மேக் அப்-ஐ நீக்குவதற்கு மேக் அப் அகற்றும் வைப்ஸ், அல்லது மேக் அப் ரிமோவரை பயன்படுத்தி உங்கள் முகத்தை சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.

2.கிலேன்ஸ்:

வெறும் மேக் அப் மட்டும் அகற்றினால் உங்கள் முகம் சுத்தம் ஆகிவிட்டது என்று நினைக்க கூடாது. ஒரு நல்ல கிளீனர் அல்லது ஃபேஸ் வாஷ்  பயன்படுத்தி முகத்தை சுத்தமாக கிளீன் செய்ய வேண்டும்,

face

இப்படி கிளீன் செய்வதன்மூலம் முகத்தில் தங்கி இருக்கும் அழுக்குகள், மாசுகள் அகன்று விடும் இல்லையென்றால் பின்வரும் முறைகளை செய்தும் எந்த பலனும் ஏற்படாது.

3.ட்ரீட்:

ஒரு நல்ல ஸ்கின் கேர் சீரம் உபயோகிப்பது உங்கள் முகத்திற்கு மிகவும் நல்லது. உங்களுக்கு முகப்பரு பிரச்சனைகள் இருந்தால் முகப்பருக்களை தடுக்கும்  வகையில்  சீரம் வாங்க வேண்டும்,

serum

மேலும் ஹைப்பர் பிங்மேண்டேசன் இருப்பவர்கள் வைட்டமின் சி சீரம் உபயோகிக்க வேண்டும். 

4.ஹைட்ரேட்:

உங்கள் முகத்தை சாஃப்ட் மற்றும் ஆரோக்யமாக இருக்க முகத்தை நன்கு ஹைட்ரேட் செய்ய வேண்டும். அது வெயில் காலமோ, குளிர்காலமோ எந்த காலமாக இருப்பினும் முகத்தை ஹைட்ரேட் செய்துகொள்ள மறக்க கூடாது.

skin

டோனர் உபயோகிப்பது சருமத்திற்கு மிகவும் நல்லது.குறிப்பாக வீட்டிலேயே உங்களுக்கென ஒரு டோனர் செய்து உபயோகிப்பது நல்லது. 

5.மொய்ஸ்டரைஸ்:

உங்கள் முகத்திற்கு ஏற்ற மொய்ஸ்ட்ரைஸர் அல்லது நைட் கிரீம் உபயோகிப்பது மிக அவசியம் இதை தினம் செய்து வந்தால் உங்க முகம் பளபளப்பாவது உறுதி! 

banita

முகத்தை இரவுகளில் மேற்கூறிய அனைத்து ஸ்டெப்புகளையும் பின்பற்றிவந்தால் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாகவும் எந்த வித பிரச்சனைகளும் வராமல் பொலிவுடன் காத்துக்கொள்ளலாம். காலையில் வெளியில் கிளம்பும் போது உங்கள் அழகுக்காக எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறீர்கள் எவ்வளவு முக்கியமோ அதே போல் இரவிலும் கவனம் செலுத்துவது அதைவிட முக்கியம்.

2018 TopTamilNews. All rights reserved.