• August
    25
    Sunday

Main Area

Mainஅணு அணுவாய் சாவதென்று தீர்மானித்தால்...குளிர்பானம் ரொம்ப நல்லது!

குளிர்பானம்
குளிர்பானம்
Loading...

வெய்யில் அதிகமாக இருக்கிறது என்பதற்காக,கூலா ஒரு டின்களில் அடைத்து வைத்திருக்கிற குளிர் பானங்களை குடிக்கிற பழக்கம் உள்ளவரா நீங்கள்? அதை குடித்துக்கொண்டே நடந்து போகும் போது ‘கெத்தா’ஃபீல் பண்ணியிருக்கிங்களா…? அப்ப ரைட்டு,கூல் ட்ரிங்ஸ் பாட்டிலை கீழே வச்சுட்டு இதை படியுங்க,அல்லது குடிச்சுக்கிட்டே படிச்சாலும் சரி; உங்க வாழ்க்கை உங்க கையில்!

drinking cool drinks

உலகம் முழுக்க குளிர்பானங்களைக் குடிப்பதால் வருசத்துக்கு 1,84,000 பேர் பல்வேறு நோய்களுக்கு ஆளாகி இறப்பை சந்திப்பதாக ஒரு புள்ளிவிபரம் சொல்கிறது.பொதுவாக குளிர் பானங்களில் சேர்க்கப்படும் அளவுக்கு அதிகமான சர்க்கரை, கெமிக்கல்ஸ் கலந்து செய்படும் குளிர்பானங்களால் உடலுக்கு எந்த விதமான நன்மைகளையும் செய்வதில்லை! மாறாக,மரணத்தை பரிசாகத்தருகிறது.

படப்பிடிப்பு நேரத்தில்,இரவு,பகலாக வேலை செய்யும் டெக்னீஷியன்கள் பலபேர் ‘டபுள் புள்’ என்றொரு குளிர் பயணத்தைக் குடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.’இதைக் குடிப்பதால் தூக்கம் வராது’ என்று அதைக் குடிப்பதற்கு ஒரு காரணமும் சொல்கிறார்கள்.மலையாள இயக்குனர் ஒருவர் திடீரென இறந்ததற்கு சம்பந்தப்பட்ட குளிபானம்தான் காரணம் என்று டாக்டர்கள் உறுதி செய்திருக்கிறார்கள்.

cool drinks

சரி,லேட்டஸ்ட் நிலவரப்படி,இந்தக் குளிப்பாங்களால் என்னென்ன நோய்கள் வர வாய்ப்பு இருக்கிறது என்பதைப் பாருங்கள்.

தொடர்ந்து,ஒரு வாரம் செயற்கை குளிர்பானங்களைக்  குடிப்பதால், கணையத்தில் தொற்று ஏற்படுவதுடன்,கணைய புற்று நோய்க்கு வழிவகை செய்கிறது.
செயற்கை குளிர்பானங்களை அருந்துவதனால் மார்பக புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பிறக்கிறது.இதில் பயன்படுத்தப்படும் கெமிக்கல்ஸ் குடல் புற்று நோயை ஏற்படுத்தக் கூடிய நச்சுக்களை கொண்டுள்ளது.
அதிக கலோரிகள் மற்றும் சர்க்கரையின் அளவும்  அதிகமாக இருப்பதால், விரைவில் இதயத்தை பலவீனப்படுத்தி,எதிர்பாராத மரணத்தை ஏற்படுத்தும். தவிர,அதிகப்படியான சர்க்கரை உடலில் சேருவதால்,அது நாளடைவில் சர்க்கரை நோயாளியாக மாற்றுவதற்கான வாய்ப்பும் அதிகம்.சமீபத்திய ஆய்வின் படி 1,30,000 பேர் நீரிழிவு நோய்க்கு ஆளாகியுள்ளனர் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு இரண்டு பாட்டிலோ,டின்னோ குடிக்கிற ஆட்களாக இருந்தால்,அவர்களுக்கு கல்லீரல் பாதிப்பும்,அதிகப்படியான கொழுப்பும் உடலில் சேர்ந்துவிடும்.இதனால்,கல்லீரலின் செயற்பாடு குறைந்து விடும்.அதுதான் உடலின் இயக்கத்துக்கு மிக முக்கியமானது.அதில்,பிரச்சினை தொடங்கினால் ,அடுத்தடுத்த வேறு பல உறுப்புகளும் பாதிப்படையும்.

cool drinks


குளிர்பானங்களை கர்ப்பிணி பெண்கள் தொடர்ந்து குடிப்பதால், பிரசவதின் போது ட்யூ டேட்டுக்கு முன்பே குழந்தை பிறக்கிறதுக்கான ஆபத்தும் உண்டு.தவிர,மூளையில் இரசாயன மாற்றம் ஏற்பட்டு ஹைப்பர் ஆக்டிவிற்கு வழிவகை செய்யும்.இதனால்,உடல் எடை அதிகரிப்பதுடன் சீக்கிரமே வயதான தோற்றத்தையும் தரக்கூடியது. சிறு வயதிலேயே பெண் குழந்தைகள் பூப்பெய்துவதற்கு காரணமாக இருக்கிறது என்று அமெரிக்காவின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன!
தொடர்ந்து குளிர்பானங்களைக் குடிக்கும்,யங்ஸ்டர்ஸின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு,வன்முறை எண்ணங்களும்,எளிதில் தப்பான காரியங்கள் செய்யக்கூடியவர்களாகவும் மாறக்கூடிய வாய்ப்புகள் மிக அதிகம்!
இதுக்கு அப்பறமும் இந்தக் கருமத்தைக் குடிச்சேதான் தீருவேன்னு நீங்க அடம்பிடித்தால்...ஆல் தி பெஸ்ட் ...

2018 TopTamilNews. All rights reserved.