• February
    27
    Thursday

Main Area

Main



அரண்மனையிலிருந்து அபார்ட்மென்டுக்கு - ஹாரி மற்றும் மேகன் இனி இளவரசர், இளவரசி இல்லை   

prince-harry and meghan markle
prince-harry and meghan markle

லண்டன், ஜனவரி 19 (யுஎன்ஐ) இளவரசர் ஹாரி மற்றும் மனைவி மேகன் ஆகியோர் இனி தங்கள் அரச பட்டங்களை பயன்படுத்த மாட்டார்கள், மேலும் அரச கடமைகளுக்கு பொது நிதியைப் பெற மாட்டார்கள் என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
இனி  இந்த ஜோடி ராணியை அதிகாரப்பூர்வமாக பிரதிநிதித்துவப்படுத்தாது.
 இது அவர்களின் இங்கிலாந்து குடும்ப வீடாகவே இருக்கும், என்று சனிக்கிழமை வெளியிடப்பட்ட அந்த அரண்மனை அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

harry


அறிக்கையின்படி, இந்த புதிய சட்டம்  இந்த ஆண்டு இந்த வசந்த காலத்தில் நடைமுறைக்கு வருகிறது.
ராணி எலிசபெத் II இன் பேரன் இளவரசர் ஹாரி மற்றும் அவரது அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மனைவி மேகன் ஆகியோர் மூத்த ராயல்கலிலிருந்தும் அரண்மனையிலிருந்தும் வெளியேற விரும்புவதாக  அறிவித்த ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
இந்த ஒப்பந்தம் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான புதிய வாழ்க்கையை அவர்கள் உருவாக்கத் தொடங்கும் என்று ராணி  நம்பிக்கையோடு கூறினார்.

elizabeth


"கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் அனுபவித்த கஷ்டங்களை  நான் உணர்கிறேன், மேலும் சுதந்திரமான வாழ்க்கைக்கான அவர்களின் விருப்பத்தை ஆதரிக்கிறேன். இந்த நாடு, காமன்வெல்த் மற்றும் அதற்கு அப்பால் அவர்கள் செய்த அர்ப்பணிப்பு பணிகள் அனைத்திற்கும் நான் அவர்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். மேகன் இவ்வளவு விரைவாக குடும்பத்தில் ஒருவராக மாறியது குறித்து நான்  பெருமிதம் கொள்கிறேன். இன்றைய ஒப்பந்தம் மூலம்  அவர்கள் மகிழ்ச்சியான மற்றும் அமைதியான புதிய வாழ்க்கையை உருவாக்க உதவும்  என்பது எனது முழு குடும்பத்தின் நம்பிக்கையாகும், ”என்று அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி ராணி மேற்கோளிட்டுள்ளார்.
அவர்களுடைய பாதுகாப்பு ஏற்பாடு குறித்த விவரங்கள் குறித்து ராயல் குடும்பத்தினர் குறிப்பிடவில்லை.

2018 TopTamilNews. All rights reserved.