kaappan-mobile kaappan-large
  • September
    19
    Thursday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


இட்லி சாம்பாரை தமிழர்களின் உணவாக்கிய ரத்னா கேஃப்!

ரத்னா கேஃப்
ரத்னா கேஃப்
Loading...

இன்று,தமிழர்களின் காலை உணவு என்றாலே இட்லி சாம்பார்தான் என்று உலகமே சொல்கிறது.இதற்கு காரணமாக இருந்தவர் தமிழரல்ல என்பது தெரியுமா? 

ratna cafe

திருவல்லிக்கேணி ஹை ரோடில் 1948-ம் ஆண்டு ரத்னா கேஃபை துவங்கியவர் ஒரு உத்திரப்பிரதேச ஆசாமி.உ.பியில் இருக்கும் மதுரா நகரில் பிறந்த ஜாகிலால் குப்த்தா சென்னைக்கு வந்து தமிழர்களின் நாக்கின் போக்கையும்,சாம்பாரின் நுணுக்கங்களையும் புரிந்து கொண்டுதான் கடையைத் துவங்கி இருக்கிறார்.

அறுபதுகளில், சரவணபவன் ,ஆரியபவன்,சங்கீதா பவனெல்லாம் வருமுன்,ரத்னாபவனுக்கு போட்டி என்றால் டிரைவ்- இன்னும் ஒருசில 'பிராமணாள் கபே'க்களும்,உடுப்பி ஒட்டல்களும்தான்.குப்த்தா அவர்களிடமிருந்த சாம்பார் வடை,தயிர் வடை போன்ற ஐட்டங்களையும் தானும் தயாரித்து வழங்கத்துவங்கினார்.

idly sambar

சாப்பிடுபவரின் முன்னால் இலை போடாமல் தட்டு வைத்த முதல் உணவகம் அனேகமாக ரத்னா கேஃபாகத்தான் இருக்க வேண்டும்.ஒரு.தட்டில் ஆவி பறக்க்கும் இரண்டு இட்லிகளை வைத்து உங்கள் முன்னால் வைக்கப்படும் போது அதில் ஒரு கனமான ஸ்பூனும் இருக்கும்.அடுத்து சர்வர் உங்கள் தட்டிலுள்ள இட்லிகளுக்கு கொதிக்கும் சாமாரால் அபிஷேகம் செய்து அதன் மீது ஒரு ஸ்பூன் நெய் வார்ப்பார்.சாம்பார் அதிகமாக இருப்பது போன்ற ஒரு தோற்ற மயக்கம் தோன்றும்.

இப்போது நீங்கள்,உங்களுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் ஸ்பூனால் அந்த இட்லிகளை வெட்டி,நசுக்கி சாம்பாரில் கரைக்க வேண்டும்,இப்போது அதே சர்வர் வந்து ,மேலும் இரண்டு கரண்டி சாம்பாரை விடுவார்.இனி நீங்கள் சாப்பிடத் துவங்கலாம்.

sambhar idly

இன்னும் சாம்பார் வேண்டுமானால் கேட்கலாம்.நாலு இட்லிக்கு எட்டுக்கரண்டி சாம்பார் வாங்குகிற வாடிக்கையாளர்களை எல்லாம் பார்த்தவர்கள் அவர்கள்.
காலையும் மாலையும் பெரும்பகுதி நேரம் சாம்பார் இட்லிதான் ஹாட் சேல். இதுதவிர மற்ற தோசை வகைகள்,பூரி கிழங்கு எல்லாம் உண்டு.அவற்றில் ரவாதோசையும் ஃபேமஸ்தான்.சாப்பிட்டு முடித்தபின் பித்தளை டபராவில் தரப்படும் ஸ்ட்ராங்கான காஃபி,அப்படியிருக்கும்.அன்றை சென்னை பேச்சிலர்கள் வாழ்க்கையில்...ஒரு நாள் துவங்குவதும் முடிவதும் இப்படித்தான்.

sambhar idly

சாம்பாரைக் கண்டுபிடித்ததும் தமிழர்கள் அல்ல.அது தஞ்சை அரண்மனை சமையல்காரர்களின் படைப்பு.அந்த சாம்பார் இட்லியை அஸ்திவாரமாக்கி துவங்கிய ரத்னா கேஃப் இன்று பெரு நிறுவனம் ஆகிவிட்டது.ஜாகிலால் குப்தாவுக்கு பிறகு திரிலிக் நாத் குப்த்தா,அவருக்குப்பின் ராஜேந்தர் குப்த்தா,என்று கை மாறி இப்போதைய உரிமையாளர் லோகேஷ் குப்தாவின் கைகளுக்கு வந்திருக்கிறது.அறுபதாண்டுகாலம் தனிமறமாக இருந்த ரத்னா கேஃப் இப்போது நகரெங்கும் கிளை பரப்பி தோப்பாகிவிட்டது.

2018 TopTamilNews. All rights reserved.