• November
    21
    Thursday

Main Area

Main



எடப்பாடிக்கு பாஜக கொடுத்த ஐடியா... அலறியடித்து ஒதுங்கும் மு.க.ஸ்டாலின்..!

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

ஏகப்பட்ட பிரச்னைகளை கொட்டித் தீர்க்க கிளம்பிய எடப்பாடியின் சுமைகளை குறைத்து உற்சாகம் கொள்ள வைத்திருக்கிறது பாஜக தலைமை.eps

டெல்லியில் இருந்து கொடுக்கப்பட்ட ஐடியாவை செயல்படுத்தும் திட்டத்தில் தீவிரமாகி இருக்கிறார் எடப்பாடி. ‘திமுக தரப்பில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் யார் பேசினாலும் அதை டேப் செய்யுமாறு உளவுத் துறைக்கு உத்தரவு போயிருக்கிறது. குறிப்பாக திமுக தரப்பில் இருந்து யாராவது அவர்களிடம் பேசினால் அதை உடனுக்குடன் கண்காணித்து ரிப்போர்ட் அனுப்புமாறும் சொல்லப்பட்டு இருக்கிறது. ops

திமுக தரப்பில் இருந்து விரிக்கும் வலையில் பணம்தான் பேரம் பேசப்படுகிறது. இதுவரை போனில் அப்படியான பேரத்தை யாரும் பேசவில்லை. நேரில்தான் எம்.எல்.ஏ.க்களை சந்தித்துப் பேசி வருகிறார்கள். அப்படி யாராவது போனில் பேசினால் அந்த ஆதாரத்தை கையில் எடுத்து வருமான வரித்துறை, சிபிஐ மூலம் திமுக தலைமையை குறிவைக்கலாம். அதன் பிறகு ஆட்சியை கலைக்கிறோம் என்று திமுக தரப்பில் இருந்து வாயே திறக்க மாட்டார்கள்.’ என்பதுதான் டெல்லியில் இருந்து கொடுத்த ஐடியா. அந்த ஆதாரங்களைப் பிடிக்கும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் எடப்பாடி.eps

இதெல்லாம் அரசல் புரசலாக திமுக தரப்புக்கு தெரிய வந்திருக்கிறது. இனி ஆட்சி கலைப்பு தொடர்பாக யாரும் எதுவும் பேச வேண்டாம் என வாய் மொழி உத்தரவு போட்டிருக்கிறாராம் ஸ்டாலின்.

2018 TopTamilNews. All rights reserved.