kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


அர்ஜுன் ரெட்டி மாதிரி ஆள் இருந்தா சொல்லுங்க...கல்யாணம் பண்ணிக்க நான் ரெடி! ஷாக் கொடுக்கும் நடிகை!

அர்ஜுன் ரெட்டி
அர்ஜுன் ரெட்டி
Loading...

ஃபேஸ் புக் பக்கம் போனாலே ‘இந்த சிங்கிளைக் கண்டுக்க ஆளே இல்லையே’ என்கிற புலம்பல் சத்தம் ஓவரா கேட்கும்.எனக்கு மட்டும்தான் கேட்டிருக்கும் என்று நினைத்தால் ,ஆந்திரா வரைக்கும் கேட்டிருக்கும் போல! உங்களுக்கான நல்ல தகவல்தான் இந்த செய்தி!

போராடிக்  கிடைத்த வாய்ப்பு 

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. முதல் படத்திலயே அத்தனை இளசுகளின் மன குளத்திலும் கல்லெறிஞ்சு கலக்கத்தை உண்டாக்கிய இந்தக் கல்நெஞ்சக்காரிதான் இப்படியொரு ஸ்டேட்மெண்ட் கொடுத்திருக்கிறார்.ஹலோ,எங்க கிளம்பிட்டிங்க! ரெஸ்யூம் அனுப்பவா? ஃபேமிலி பேக்ரவுண்ட் தெரிஞ்சுக்க வேண்டாமா!

ஷாலினி பாண்டே

சின்ன வயசில் இருந்தே நடிப்பு தான் வாழ்க்கை என்று ஷாலினி பாண்டே முடிவு பண்ணியிருக்கிறார்.’அதெல்லாம் வேலைக்காகாது...ஒழுங்கா படிச்சு வேலைக்கு போற வழியைப் பாரு’ என்று சினிமா படங்களில் வரும் அப்பா மாதிரியே ஷாலியினின் அப்பாவும் மிரட்டியிருக்கிறார்.

அது பற்றி கவலைப்படாமல் மும்பையில் தனி ஆளாக வாய்ப்புத் தேடி அலைந்து கொண்டிருந்த போது தான் ‘அர்ஜுன் ரெட்டி’படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்திருக்கிறது.இந்த தகவலை அப்பாவிடம் சொல்ல அரை மனதாக ஓக்கே சொன்னவர்,படத்தின் இயக்குனரிடம் நெருக்கமான காட்சிகள் இருக்கக்கூடாது. முத்தக்காட்சி கூடவே கூடாது என்று போட்ட அத்தனை கண்டிஷனையும் ஒப்புக்கொண்டு தான் நடிக்க வைத்திருக்கிறார் இயக்குனர்.

அர்ஜுன் ரெட்டி கிடைப்பாரா ?

அப்புறம் என்ன,படம் ஹிட்டு.மகள் சரியான முடிவுதான் எடுத்திருக்கிறாள் என்று கொண்டாடி தீர்த்திருக்கிறது மொத்தக் குடும்பமும். தமிழில்,ஜி.வி.பிரகாஷ், ஜீவா, விஜய் ஆண்டனி மூவரோடும் தலா ஒரு படம் நடித்துக் கொண்டிருக்கிறார்.’இந்த இரண்டு வருடத்தில் நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்’என்று சொல்லும் ஷாலினி பாண்டே,லவ் பண்ணித் தான் கல்யாணம் பண்ணுவாராம். எப்படிப்பட்ட மாப்பிள்ளையா இருக்கணும் என்று கேட்டதுக்குத் தான் ‘அர்ஜுன் ரெட்டி மாதிரி ஆள் இருந்தா சொல்லுங்க! என்று சொன்னது.

அர்ஜுன் ரெட்டி

ஒரிஜினல் அர்ஜுன் ரெட்டி மாதிரி இல்லேன்னுதான் பாலா ரீ மேக் பண்ணின படத்தையே தூக்கிப் போட்டுட்டாய்ங்க! இதுல அர்ஜுன் ரெட்டி மாதிரியே ஆளுக்கு எங்க போறது? பாஸ் இப்போ நீங்க ரெஸ்யூம் அனுப்பலாம்!

2018 TopTamilNews. All rights reserved.