• February
    21
    Friday

Main Area

Main



நான் சொன்னது போல தி.மு.க- காங். பிரிவு நடக்கிறது... கமல் கருத்து

கமல்ஹாசன்
கமல்ஹாசன்

நான் ஏற்கனவே கூறியதுபோலவே தி.மு.க, காங்கிரஸ் இடையே பிரிவு ஏற்பட்டுள்ளது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

kamal

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலிடம் தி.மு.க, காங்கிரஸ் மோதல் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "தி.மு.க, காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பிரிவினை ஏற்படும் என்று ஏற்கவே நான் சொல்லியிருந்தேன். அது நடந்துகொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன்" என்று கூறினார்.

dmk

"தி.மு.க-வுடன் எந்த கருத்து வேறுபாடும் இல்லை. தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கும் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான அறிக்கைக்கும் சம்பந்தம் இல்லை. அது முழுக்க முழுக்க உள்ளாட்சி தொடர்பானது.

alagiri

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மு.க.ஸ்டாலின் தலைமை ஏற்றுத் தமிழக முதலமைச்சராக வர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது" என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று கூறியுள்ள நிலையில் கமல் கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.