• August
    21
    Wednesday

Main Area

Main



கபீர் சிங் படத்தை பார்க்க விருப்பமில்லை: விஜய் தேவரகொண்டா ஓபன் டாக் 

விஜய் தேவரகொண்டா
விஜய் தேவரகொண்டா
Loading...

சென்னை: நடிகர் விஜய் தேவரகொண்டா கபீர் சிங் படம் குறித்துப் பேட்டியளித்துள்ளார். 

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளி வந்து மாபெரும் ஹிட் அடித்த திரைப்படம் ’அர்ஜுன் ரெட்டி’. காதலியைப் பிரிந்து வாழும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அசத்தியிருந்தார். அதில் இடம்பெற்ற காதல் காட்சிகளும், முத்தக் காட்சிகளும் பல சர்ச்சையைக் கிளம்பினாலும், ரசிகர்கள் மத்தியில் இந்த படம் மிகவும் வரவேற்பைப் பெற்றது. அதைத்தொடர்ந்து இந்த படம் தமிழ், ஹிந்தி போன்ற மொழியில் எடுக்க முடிவு செய்தனர். அந்த வகையில் ஹிந்தியில் கபீர் சிங் என்ற பெயரில் சமீபத்தில் வெளியானது. 

இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது இவரிடம் அர்ஜுன் ரெட்டியின் ஹிந்தி ரீமேக்கான கபீர் சிங் படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 

kabir singh

அவர் கூறியதாவது, 'படத்தை பார்த்த அனைவரும் என்னிடம் கூறியது ஷாகித் கபூர் கதாபாத்திரத்தை அப்படியே உள் வாங்கி நடித்துத்திருக்கிறார். அதனால் நான் படத்தை பார்க்க வேண்டும் என்று அவசியமே இல்லை. இந்த படத்தின் இயக்குநர் சந்தீப் என்னிடம் அடிக்கடி கபீர் சிங் படம் பார்க்க சொன்னார். இந்த படம் ஹிட் ஆகும் என்று சொன்னேன் ஆனால் அது மெகா ஹிட் அடித்துவிட்டது'  என்று கூறியுள்ளார். 
 

2018 TopTamilNews. All rights reserved.