• November
    12
    Tuesday

Main Area

Main



எனக்கும் டப்பிங்கிற்கும் சம்பந்தம் இல்லை; அவெஞ்சர்ஸ் பற்றி முருகதாஸ்

ஏ.ஆர்.முருகதாஸ் - அவெஞ்சர்ஸ்
ஏ.ஆர்.முருகதாஸ் - அவெஞ்சர்ஸ்

அவெஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் (Avengers Infinity war) படத்தின் அடுத்த பாகமான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் (Avengers Endgame) வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது. தமிழ், தெலுங்கி, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகும் இத்திரைப்படத்தின் தமிழ் வசனங்களை எழுதியிருக்கிறார் ஏ.ஆர். முருகதாஸ்.

thanos

தமிழில் விஜய் சேதுபதி ஒரு போர்ஷனுக்கு இதில் டப்பிங் கொடுத்து, நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் டப்பிங் விஷயத்தில் ஏ.ஆர். முருகதாஸ் தலையீடு இருப்பதாக செய்திகள் பரவி வந்தது. இதுகுறித்து தனியார் பத்திரிகைக்கு பேட்டியளித்த முருகதாஸ், என்னை தமிழ் டப்பிங்கிற்கு வசனம் எழுதித்தர சொன்னார்கள், என் பணியை முடித்து கொடுத்துவிட்டேன். டப்பிங் விஷயத்தில் என் தலையீடு கிடையாது, அது முழுக்க முழுக்க தயாரிப்பு நிறுவனத்தின் முடிவு என தெரிவித்துள்ளார்.

avengers

ராபர்ட் டவ்னி ஜூனியர், ஸ்கேர்லட் ஜான்சன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தை எதிர்பார்த்து மார்வெல் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தமிழ் டப்பிங் வெர்சன் அவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.