பெரியார் குறித்து பேசியதற்கு மன்னிப்பு கேட்க முடியாது...ரஜினி திட்டவட்டம்!

ரஜினி
ரஜினி


துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

ttn

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் கடந்த 14 ஆம் தேதி   நடைபெற்றது.  இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய ரஜினி, 'பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது, அந்த சிலைகளுக்கு  செருப்பு மாலை போடப்பட்டது' என்றும் பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு  கிளம்பியுள்ளது.  இதனால் ரஜினி மீது பல்வேறு காவல்நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மதுரையில் நடிகர் ரஜினியின் உருவ பொம்மையை ஆதித் தமிழர் கட்சியினர் எரித்தனர். 

 

ttn

இந்நிலையில் துக்ளக் விழாவில் பெரியார் குறித்து நான் பேசியதற்கு மன்னிப்பு கேட்ட முடியாது என்று ரஜினி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், '1971ல் நடந்த பேரணி குறித்து பேசியதற்காக மன்னிப்பு கேட்க முடியாது, கற்பனையாக எதுவும்  நான் கூறவில்லை. ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாக கொண்டுசெல்லப்பட்டது என பலரும் ஊர்ஜித்துள்ளனர்.  இதுகுறித்து அவுட்லுக் பத்திரிகையில் கூட செய்தி வெளியானது. பத்திரிகைகளில் வந்ததை தான் நான்  கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது' என்றார். 

தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் ரஜினியின் வீட்டை முற்றுகையிட போவதாக அறிவித்ததையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.