• August
    24
    Saturday

Main Area

Main



திருமணத்திற்கு வித்தியாசமான கிப்ட் கேட்ட வினோதம்: என்ன கிப்ட் தெரியுமா?

gift
gift
Loading...

ஹைதராபாத்: நரேந்திர மோடிக்கு ஓட்டு கேட்கும் விதமாகத் திருமண அழைப்பிதழை மாற்றியுள்ள வினோதம் ஒன்று தெலுங்கானாவில் அரங்கேறியுள்ளது.

ஹைதராபாத் நகரைச் சேர்ந்தவர்  சுபாஸ். 68 வயதான சுபாஷ் ராவ் ஓய்வுபெற்ற மின்வாரிய ஒப்பந்தக்காரராவார். இந்நிலையில் வரும் 21ம் தேதி நடக்கவுள்ள தனது மகன் திருமணத்துக்கு சுபாஷ்  திருமண அழைப்பிதழை அச்சிட்டுள்ளார்.அதில், 'மோடிக்கு ஓட்டு போடுங்கள் அதுவே திருமணத்திற்கு நீங்கள் தரும் பரிசு , அதை தவிர வேறு எந்த பரிசும் தேவையில்லை' என அச்சிட்டுள்ளார். 

 

modi

இது குறித்து பேசியுள்ள அவர், 'எங்களுக்கு மோடி என்றால் பிடிக்கும். அதனால் தான் மோடிக்கு ஓட்டுப் போடுங்கள் என்ற வாசகத்துடன் பத்திரிகை அச்சிட விரும்பினோம். எனக்கு முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மீதும் அதீத அன்பு உண்டு. சுமார் 1000 பத்திரிகை அச்சிட்டு உறவினர்கள் நண்பர்களும் கொடுத்துள்ளோம்' என்றார்.

modi

சமீபகாலமாகத் திருமண அழைப்பிதழ்கள் டெபிட் கார்டு, ஆதார் போன்ற வடிவங்களில் அச்சடிப்பது டிரெண்டாகி வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.