மத்திய பிரதேசத்தில் திருமணமான பெண்ணுடன் தப்பியோடிய கள்ளக்காதலனையும், அவர்களுக்கு உதவிய இரு பெண்களையும் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தில் திருமணமான பெண், தனது கள்ளக்காதலுடன் வீட்டை விட்டு ஓடியுள்ளார். இதையடுத்து கள்ளக் காதலனை தொடர்பு கொண்ட அந்த பெண்ணின் கணவர், நான் உங்களிடைய வாழ்க்கையிலிருந்து விலகி கொள்கிறேன். உங்கள் இருவரையும் சேர்த்துவைக்கிறேன். இருவருக்கும் இடையில் தொந்தரவு கொடுக்க மாட்டேன். சேர்த்துவைக்கிறேன் வந்துவிடுங்கள் என்று கூறியுள்ளார். இதை நம்பிய அந்த இளைஞரும், அந்த பெண்ணும் ஊருக்குள் திரும்பி வந்துள்ளனர். அவர்களுடன் அந்த ஜோடிகளுக்கு உதவிய இரு பெண்களும் வந்துள்ளனர். ஊருக்குள் வந்த அந்த நான்கு பேரையும் சேர்ந்து மரத்தில் கட்டி வைத்து அந்த பெண்ணின் கணவரும், உறவினர்களும் சேர்ந்து பிரம்பால் அடித்துள்ளனர். மேலும் அந்த ஜோடிகளுக்கு உதவிய இரு பெண்களுக்கும் பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் 3 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து சிறையிலடைத்துள்ளனர். மேலும் 4 பேரை தேடி வருகின்றனர்.