• March
    31
    Tuesday

Main Area

Main



டெல்லியில் பிரம்மாண்ட ராணுவ தலைமையகம்! - ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்

அமைச்சர் ராஜ்நாத் சிங்
அமைச்சர் ராஜ்நாத் சிங்

டெல்லியில் இந்திய ராணுவத்தின் புதிய தலைமையகத்துக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் அடிக்கல் நாட்டினார்.
டெல்லி கண்டோன்மெண்ட் பகுதியில் இந்திய ராணுவத்துக்கு புதிய தலைமையகம் கட்டப்பட உள்ளது. தல் சேனா பவன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்டிடம் 35 ஏக்கர் பரப்பில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட உள்ளது. 

delhi


இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடந்தது. இதில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று ராணுவ தலைமையகத்துக்கு அடிக்கல் நாட்டினார். 

delhi1


தற்போது இந்திய ராணுவத்தின் பல்வேறு அலுவலகங்கள் டெல்லியின் பல பகுதிகளில் அமைந்துள்ளது. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில் இந்த புதிய பிரம்மாண்ட கட்டிடம் கட்டப்பட உள்ளது. விழாவில் பேசிய ராஜ்நாத் சிங், "இந்த புதிய கட்டிடம் நம் அனைவருக்கும் உத்வேகத்தை அளிக்கும் வகையில் உள்ளது. தல் சேனா பவனுக்கான முதல் கல்லை நாங்கள் எடுத்து வைத்துள்ளோம். இது நாட்டிற்காக உயிர்த் தியாகம் செய்த வீரர்களின் அறியப்படாத வீரத்தைக் குறிக்கும்" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.