kaappan-mobile kaappan-large
  • September
    21
    Saturday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


கோபத்தை வெல்வது எப்படி? குருநாதர் சொன்ன ரகசியம்

குரு
குரு
Loading...

எப்போதும் சாந்தமாகவே காட்சித் தருகிற துறவி ஒருவர் இருந்தார். சமயங்களில், யார் அவரை எப்படி அவமானப்படுத்தி வந்தாலும், அவர் துளியும் கோபமே படாதவர்.

thuravi

‘எப்படி இவரால் இப்படி எப்போதுமே அமைதியாக இருக்க முடிகிறது?’ என்று அவரது சீடர்களுக்கு எல்லாம் ஆச்சர்யமாக இருந்தது. தங்களது குருநாதரை யாராவது அவமானப்படுத்தும் போதெல்லாம், சீடர்கள் தங்களது மனதுள் கோபப்பட்டார்கள். இருந்தாலும், குருவின் அமைதிக்கு ஏதாவது காரணம் இருக்கும் என்று அவர்களும் அமைதியாக இருந்து விட்டார்கள். ஒரு நாள், குருவின் அமைதிக்கும், எப்போதுமே சாந்தமாகவே இருப்பதற்குமான காரணத்தை அறிய அவர்களுக்குள் ஆர்வம் எழுந்தது. சீடர்கள் ஒன்று சேர்ந்து, ஒரு நாள், அந்த ரகசியத்தை அறிந்து கொள்ளும் ஆவலில், தங்களது கேள்வியை அவர்களது குருநாதரிடமே கேட்டார்கள்.
தம் சீடர்களின் சந்தேகத்திற்கும் பொறுமையாக பதில் சொல்ல ஆரம்பித்தார் குரு. 

rishi

“ ஏரியில் காலியாக இருக்கும் ஏதாவது ஒரு படகில் அமர்ந்து தியானம் செய்வது என்னுடைய வழக்கம். அப்படி ஒருமுறை நான் தியானத்தில் இருந்த போது,  நான் அமர்ந்திருந்த படகை வேகமாக இன்னொரு படகு வந்து முட்டியது. தியானத்தில் இருந்த நான், அந்த இன்னொரு படகு வந்து மோதியதில், தியானம் கலைந்து, ‘இப்படி அஜாக்கிரதையாக படகை முட்ட விட்டது யார்?’ என்று கோபமாகக் கண்களைத் திறந்து பார்த்தேன். 
நான் அமர்ந்திருக்கும் படகின் மீது வந்து மோதியது ஒரு வெற்றுப்படகு. யாருமே அந்த படகை செலுத்தி வரவில்லை. காற்றுக்கு அசைந்து அசைந்து அதுவாகவே நகர்ந்து வந்து நான் அமர்ந்திருந்த படகின் மீது மோதி இருக்கிறது. என் கோபத்தினை அந்த வெற்றுப் படகிடம் காட்டி என்ன பயன்?
யாராவது என்னைக் கோபப்படுத்தினாலோ, அவமானப்படுத்தினாலோ எனக்கு இது தான் நினைவுக்கு வரும். இதுவும் வெற்றுப் படகு தான் என்று அமைதியாகி விடுவேன்!” என்றார்.
குருவிடம் விளக்கம் கேட்ட சீடர்கள் மனத் தெளிவு பெற்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.