• August
    20
    Tuesday

Main Area

Main



தாம்பூலத்தை எப்படி போட்டால் நோய்கள் நீங்கும்

தாம்பூலம்
தாம்பூலம்
Loading...

விருந்து, விசேஷங்களில் வீட்டு பெரியவர்கள் தாம்பூலம் தரிப்பதைப் பார்த்திருப்பீர்கள். கல்யாணம், நிச்சயதார்த்தம், சாமி தரிசனம் என்று எல்லா சுப நிகழ்ச்சிகளிலும் வெற்றிலை தவறாமல் இடம் பிடித்து விடுகிறது. வெற்று இலையாக இல்லாமல் வெற்றி தரும் இலையாக இருப்பதால் தான் எல்லா சுப நிகழ்ச்சிகளிலும், வெற்றிலைப் பாக்குக்கு முதலிடம் கொடுக்கிறோம். வெற்றிலை வைக்காமல் செய்யும் யாகம் முதலானவைகள் பலன் தராது. அந்த அளவிற்கு மகத்துவம் வாய்ந்தது வெற்றிலை. 

tambulam

பெரியவர்கள் தாம்பூலம் தரிப்பதைப் பார்த்து, நாமும் வெற்றிலையைப் போட்டு சில சமயங்களில் விளையாட்டாய் எப்போதாவது மென்றிருக்கிறோம். ஆனால், எப்படி தாம்பூலத்தைச் சரியாகப் போடுவது என்பதை அறிந்து பயன்படுத்தினால் தாம்பூலம் தரிப்பதால் நோய்கள் நம்மை விட்டு நீங்கும். அப்படி செய்யாமல், தவறாக வெற்றிலை, பாக்கு பயன்படுத்தி தாம்பூலம் தயார் செய்தால், துர்தேவதைகளும், நோய்களும் நம்மை பிடித்துக் கொள்ளும். 
தாம்பூலத்தை எப்படி தயார் செய்வது என்பதைப் பார்க்கலாம். எப்போதுமே தாம்பூலத்தை தயாரிக்கும் போது, வெற்றிலையின் காம்பையும், நுனியையும் பின்புறத்தில் உள்ள நரம்பையும் நீக்கிவிட வேண்டும். எதனால் இப்படிச் செய்கிறோம். வெற்றிலையின் நுனியில் மூதேவி வாசம் செய்கிறாள். வெற்றிலையின் பின்பக்கம் உள்ள நரம்பை நீக்காமல் உண்பதால் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் கிடைக்காமல் போகும். அதே போல் வெற்றிலை போடும் போது முதலில் பாக்கை மெல்லக் கூடாது. ஒரு வெற்றிலையை மென்ற பிறகே பாக்கு வெற்றிலையை மெல்ல வேண்டும். இப்படி செய்வதால் துவர்த்தல், சொக்குதல், மூர்ச்சையாதல், பிசுபிசுத்தன்மை முதலியன ஏற்படாமல் இருக்கும். 

tambulam

அப்படி இல்லாமல் வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு,இவைகளை ஒன்றாக மெல்லும் போது அதில் நின்று ஊறிய முதல் நீர் நஞ்சாகவும், இரண்டாவது நீர் மிகு பைத்தியம் தருபவையாகவும், மூன்றாவது நீர் அமிர்தமாகவும், நான்காவது நீர் அதி இனிப்பாகவும், ஐந்து மற்றும் ஆறாவது நீர்கள் பித்தத்தோடும், அக்கினி மந்தம், ஆகியவற்றை உண்டாக்கும் என்பதால் தான் வெற்றிலைப் பாக்கை உண்ணும் போது முதல் மற்றும் இரண்டாவது நீர்களை துப்பி விட வேண்டும். மூன்றாவது மற்றும் நான்காவது நீர்களை விழுங்கிவிட வேண்டும். ஐந்தவது நீர் சுரக்கும் முன்பு வெற்றிலையை துப்பி விட வேண்டும். இதுவே தாம்பூலம் உண்ணும் முறையாகும். 
காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை, சுண்ணாம்பு குறைவாகவும் மென்றால் மலக்குற்றம் நீங்கி இரண்டு முதல் நான்கு முறை பேதியாகும். எனவே மந்தம் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலையில் பாக்கை அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் சேர்த்து கொள்ள வேண்டும். 
மதியம் சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நல்ல பசி உண்டாகும். பசி இல்லாதவர்கள் மதிய உணவுக்கு பின்பு இவ்விதமாக உண்டால் ஆரோக்கியமான பசி உண்டாகும். 

tambulam

மாலையில் வெற்றிலை அதிகமாகவும் பாக்கு, சுண்ணாம்பு, குறைவாகவும் மெல்வதால் வாயிலுள்ள ரணங்கள் குணமாகும். வயிற்று ரணத்தால் வாயில் வீசும் துர்வாடைகள் நீங்கி நல்ல மணம் வீசும். இப்படி நோய்க்கேற்றவாறு வெற்றிலை, பாக்குகளை கூட்டிக்குறைக்கும் போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
தாம்பூலம் தரிப்பது நமது பாரம்பரிய வழக்கம் தான். சரியான அளவில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு சேரும்போது நமது உடலுக்கு தேவையான சத்துக்கள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன!

2018 TopTamilNews. All rights reserved.