• August
    26
    Monday

Main Area

Main



கோட்சே வாழ்க, காந்திக்கு துப்பாக்கி சூடு: இந்து மகா சபை வெளியிட்ட வீடியோ

shakun
shakun
Loading...

அலிகார்: தேசப்பிதா காந்தியின் நினைவு நாளில் அவர் உருவப்படத்தை இந்து மகா சபையின் தேசியச் செயலாளர் புஜா ஷாகுன் பாண்டே துப்பாக்கியால் சுடுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளார். 

தேசப்பிதா மகாத்மா காந்தி சுட்டுக் கொல்லப்பட்ட தினம் இன்று. காவி கும்பல்கள் பலரும் கொலைகாரன் கோட்சேவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில் தேசப்பிதா காந்தியின் உருவப்படத்தை இந்து மகா சபையின் தேசியச் செயலாளர் புஜா ஷாகுன் பாண்டே, கோட்சே வாழ்க என்ற கோஷத்துடன் துப்பாக்கியால் சுடுவது போல் வீடியோ வெளியிட்டுள்ளார்.  இது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்தை சந்தித்து வருகிறது.

2018 TopTamilNews. All rights reserved.