• August
    21
    Wednesday

Main Area

Main



தமிழக எம்.பி.க்கள் குரலுக்குப் பணிந்த பாஜக அரசு: தபால் தேர்வு தமிழிலும் நடைபெறும் என அறிவிப்பு!

அஞ்சல் துறை
அஞ்சல் துறை
Loading...

தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

aloor

தபால் துறை தேர்வுகள் ஆங்கிலம், இந்தியில் நடைபெறும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஜூலை 14 தேதி நாடுமுழுவதும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்பட்டன.இதற்கு திமுக, அதிமுக  உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. 

ravi shankar prasad

இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று அதிமுக எம்.பிக்கள்  தபால் துறை தேர்வில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதைக் கண்டித்து அமளியில் ஈடுபட்டனர்.மேலும் தமிழக எம்பிக்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பி கூச்சலிட்டனர். இதையடுத்து பேசிய மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், 'தமிழ் மட்டுமல்லாமல் அனைத்து பிராந்திய மொழிகளிலும் தபால் துறை தேர்வுகள் நடத்தப்படும் என்றும் கடந்த ஜூலை 14 தேதி நடைபெற்ற தேர்வை ரத்துசெய்தும் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. 

 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கருத்து பதிவிட்டுள்ள துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ், 'நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு எம்.பி.க்கள் எழுப்பிய போர்க்குரலுக்குப் பணிந்தது பாஜக அரசு.தமிழைப் புறக்கணித்துவிட்டு ஏற்கெனவே நடத்திய அஞ்சல்துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், பிராந்திய மொழிகளில் மீண்டும் தேர்வு நடத்தப்படும் என்றும் அறிவிப்பு.போராடாமல் தீர்வில்லை! #தமிழ்_வாழ்க' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது கவனிக்கத்தக்கது. 

2018 TopTamilNews. All rights reserved.