• February
    26
    Wednesday

Main Area

Main



முடி வளர்ச்சிக்கு உதவும் கீரை..! பலரும் அறியாத உண்மைகள்

spinach
spinach

கீரை என்றால் இப்போதுள்ள இளையதலைமுறையினர் பலரும் முகம் சுளிக்க ஆரம்பிப்பார்கள், 'கீரையிலஎவ்வளவு  சத்து இருக்குனு தெரியுமா... ஒழுங்கா சாப்புடு'ன்னு’ பல அம்மாக்கள் தங்கள் குழந்தைகளை மிரட்டினாலும்  பிடிவாதமாக மறுத்து விடுவார்கள். இதனாலும், கெமிக்கல் கலந்த ஷாம்புவை உபயோகிப்பதால் ஆரோக்கியமான முடி வளர்ச்சி இல்லாமல் பலரும் பின்னால் அவதிப்படுவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம்.

hair fall

கீரையில் உடலுக்கு நன்மை தரக்கூடிய பல சத்துக்கள் உள்ளன. மேலும் இது உடலுக்கு மட்டுமல்ல நம் சருமத்திற்கும்,முடிவளர்ச்சிக்கும் தேவையான சத்துக்கள் ஏராளமாக இருக்கின்றன. கீரையில் உள்ள அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டுகள் நமது சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.இதிலுள்ள வைட்டமின் A, மற்றும் C இரண்டும் சரும பாதுகாப்புக்கும் முடிவளர்ச்சிக்கும் தேவையான ஊட்டசத்தைக் கொடுக்கக்கூடியது.

spinach

கீரையில் உள்ள பொட்டாசியம்,கால்சியம்,மெக்னீசியம்,ஒமேகா 3 ஃபாட்டி ஆசிட், ஐயன் ஆகிய அனைத்தும் ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுபவை, கீரையில் உள்ள ஐயன் சத்து உடலில் ஆக்சிஜன் அளவை சீராக பாயச் செய்வதோடு, புதிய செல்களை உருவாக்கி ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்திருக்க உதவும், இதனால், ஆரோக்கியமான முடி வளர்ச்சி ஏற்படும். 

beautiful skin

கீரை இலைகளில் இருக்கும் வைட்டமின் B, சூரியனின் அல்ட்ரா வயலட் கதிர்களிடமிருந்து சருமத்தை  பாது காப்பதில் முதன்மை வகிக்கிறது. எனவே இனிமேல் கீரையை தவிர்க்க வேண்டாம்.வாரத்தில் எல்லா நாட்களிலும் எதாவது ஒரு கீரை உணவில் இருக்கும்படி உங்கள் உணவு திட்டத்தை வகுத்துக்கொள்ளுங்கள். குறைந்த பட்சம் வாரத்தில் மூன்று நாட்களாவது கட்டாயம் கீரை சாப்பிட்டு வந்தால் உங்கள் சருமத்திற்கும் முடிக்கும் ஒரு ஆபத்தும் ஏற்படாது!

2018 TopTamilNews. All rights reserved.