• August
    24
    Saturday

Main Area

health
ஒரே நாளில் வாய் புண்களை சரியாக்கும் உணவு வைத்தியம்

வயிற்றில் புண்கள் ஏதேனும் இருந்தால் கூட, அதன் பாதிப்பு வாய் புண்களின் மூலமாக வெளிப்படும். முதலில் எதனால் வாய் புண் வந்தது என்று தெரிந்துக் கொள்ளுங்கள்.

அதிகம் நீர் அருந்தாவிட்டாலும், வாயில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. வாயில் புண் வந்து விட்டால் உணவு எடுத்துக் கொள்வது மட்டுமல்லாமல், பேசுவது, தண்ணீர் குடிப்பது என்று எல்லாமே கஷ்டம் தான். நமது அன்றாட உணவு வகைகளிலேயே இதற்கான வைத்தியங்கள் இருக்கின்றன. அதுவும் எந்த விதமான பக்க விளைவுகளும் இல்லாமல். அந்த மாதிரியான இயற்கை உணவு வைத்திய முறைகளைப் பார்க்கலாம்... வாய் புண் ஒரே நாளில் குணமாக, அரை மூடித் தேங்காயை அரைத்து, அதிலிருந்து பால் எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது சிறிதாக தேங்காய் பாலை புண் உள்ள இடத்தில் படும் படியாக ருசித்து குடித்து வாருங்கள். வீட்டில் தேன் இருந்தால் ஒரு கரண்டி தேங்காய் பாலில் சிறிதளவு தேன் சேர்த்து மிக்ஸ் செய்து வாயில் புண் உள்ள இடத்தில் பூசிவிடுங்கள். ஒரே நாளில் நல்ல பலன் தெரியும்.

வாய் புண்ணுக்கு வல்லாரை கீரை சிறந்த நிவாரணம் தரும். வல்லாரை கீரையை இடித்து அல்லது நன்றாக அரைத்து சிறிதளவு சாறு எடுத்து வாய்ப் புண்ணில் பூசினால் வாய் புண் குணமாகும். கற்றாழை ஜெல் சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சமாக நெய் சேர்த்து கலவையாக புண் இருந்த இடத்தில் பூசி வந்தாலும் வாய்ப்புண் குணமாகும். அகத்தி இலைகளை சிறிது நெய் ஊற்றி வதக்கி சாப்பிட்டாலும் வயிற்றில் உள்ள புண்கள் குணமாவதுடன் வாய்புண்ணும் குணமாகி விடும். அகத்தி இலையை பால் சொதி, குழம்பு போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம். வெண்டைக்காயை நெய் விட்டு ஒரு நிமிடம் வதக்கி, அப்படியே சாப்பிட்டால் வயிற்றுப் புண்களும் வாய் புண்ணும் குணமாகும். நெல்லிக்காயும் கூட வாய்ப்புண்களுக்கு சிறந்த நிவாரணம் தரும்.

aishwarya Sun, 06/30/2019 - 19:38
mouth ulcers medicine health mouth-ulcers ஆரோக்கியம்

English Title

How to cure mouth ulcers

News Order

0

Ticker

1 
Idly

குழந்தைகளுக்கு தினமும் இட்லி கொடுப்பது நல்லதா?

சந்தேகமே வேண்டாம். தினமும் காலை உணவாக இட்லி கொடுப்பது ஆரோக்கியமான விஷயம் தான். என்ன தான் உங்கள் குழந்தைக்கு செரிமான சக்தி அதிகமாக இருந்தாலும், காலையில் எடுத்துக் கொள்ளும் திட உணவு ...


நாட்டு மாதுளம் பூ

 உடம்பை பலப்படுத்தும் நாட்டு மாதுளம் பூ  துவையல்…

நாம் சமையல் செய்யும் பொழுது,அதன் ருசியை மட்டுமே பெரும்பாலான நேரங்களில் கவனத்தில் கொள்கிறோமே தவிர, அதன் சக்தியை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.காய்கறிகளை விதவிதமாக சமையல் செய்யும் நா...


சீரகம்

உடலை சீர்படுத்தும் சீரகம்

அபார்ட்மெண்ட்ல வசிச்சாலும், எல்லார் வீட்டு அடுப்படியிலும் அஞ்சறை பெட்டி இருக்கும்.நோய் நாடி...நோய் முதல் நாடின்னு சொல்வோமில்லையா, அதுமாதிரி நம் வீட்டு அஞ்சறை பெட்டியில் குவிந்து கி...


புகை

புகையிலை ஒழிப்பு தினம்: தம் அடிச்சா தப்பா சார்!

புகை நமக்கு மட்டும் பகை அல்ல நம்மைச் சுற்றி இருப்பவருக்கும் தான் என்ற வசனத்தை நியாகப்படுத்தும் புகையிலை ஒழிப்பு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 



இளமையாக இருக்க

என்றும் இளமையாக இருக்க வேண்டுமா? இதையெல்லாம் சாப்பிடாதீங்க!

நீண்டகாலம் இளமையாக இருக்க வேண்டும் என்ற ஆசை யாருக்குத்தான் இல்லை! வாரந்தோறும் வயசாகிறது என்றாலும்,சில உணவுகள் முதுமையை இரு கரம் நீட்டி அழைக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா! இவ...


கோப்புப்படம்

இந்த கீரையின் பூவில் இவ்வளவு பொரியல் சாப்பிட்டால் எவ்வளவு பலன்!

சாப்பிட்டுவிட்டு சரக்கடித்தால் அலர்ஜியாகி உடம்பெல்லாம் தடிப்பு தடிப்பா வந்திரும்னு சொல்றதால சாப்பிடறதே இல்லை என்று விஞ்ஞான விளக்கம் கொடுப்பவர்களும் இங்கே இருக்கிறார்கள்


மாணவன் அன்பு ராஜா

குடும்ப சூழல் காரணமாக படித்து கொண்டே வீதியில் உணவு விற்கும் மாணவன்: வைரலாகும் வீடியோ!

மாணவன் ஒருவர் பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர பகுதி நேரமாக சத்தான உணவு பொருட்களை விற்று வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகின்றது.


benifits of gram

இறைச்சிக்கு இணையாக புரதத்தைத் தந்து உடலை பாதுகாக்கும் பருப்புகள்

உடலை சீராக இயக்குவதற்கு புரோட்டீன்கள் மிகவும் இன்றியமையாது. நாம் அன்றாடம் சாப்பிடும் உணவில் புரதச் சத்துக்கள் நிறைந்துள்ளன. அசைவ உணவான இறைச்சி, முட்டையில் அதிகப் புரதம் உள்ளது. சைவ...


hairloss

பிரசவத்துக்குப் பின் ஏற்படும் முடி உதிர்வை சமாளித்து அடர்த்தியான கருகரு முடி வளர 5 வழிகள்

டெலோகன் எஃப்ளூவியம், இது எதோ பயங்கரமான பாதிப்பு போல தோன்றலாம், ஆனால், முதல் பிரசவத்திற்குப் பின் தாய்மார்களுக்கு ஏற்படும் இந்த அதீத முடி உதிர்வு, ஓராண்டு வரை நீடிக்கும்


piles

மூலம், பெளத்திரம் நீங்க எளிமையான இயற்கை கை வைத்தியம்!!

பெளத்திரம் என்பது ஆசன வாய்ப்பகுதியின் வெளிப்புறத்தில் ஏற்பட்ட புண் காரணமாக மலப்புழைக்கும், வெளிப்புறத் தோல் பகுதிக்கும் இடையே ஏற்படும் துவாரம் ஆகும்


ஆடாதோடை

நுரையீரல் சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும் ஆடாதோடை... இனி நிம்மதியாக மூச்சு விடலாம்!

ஆடாதோடை தென்னிந்தியாவில் பல இடங்களில் காணப்படும் மூலிகையாகும். ஆடாதோடை சிறு செடியாகவும், ஒரு சில இடங்களில் மரமாகவும் காணப்படும். இதன் இலை மாமர இலை வடிவில் இருக்கும்



sundakkai

கசப்பான சுண்டைக்காயில் இனிப்பான நன்மைகளைத் தரும் சுண்டைக்காய் சாம்பார்!

மலிவான விலை, கசப்பு சுவை இதனாலேயே சுண்டைக்காயின் மகத்துவத்தை பொதுவாக மக்கள் அலட்சியப்படுத்துகின்றனர்.


Turkey berry

சுண்டைக்காய் பிரச்னை என இனி ஒதுக்காதீங்க... நீரிழிவு, மாரடைப்பு அவதிகளை எளிதில் தீர்க்கும்!

பைசா பொறாத விஷயங்களை ‘சுண்டைக்காய் சமாசாரம்’ என்பார்கள். ஆனால், அப்படி அலட்சியப்படுத்தக்கூடியதல்ல, காய்கறிகளுள் மிகவும் சிறிதான இந்த சுண்டைக்காய்.


jigarthanda

ஜில் ஜில் ஜிகர்தண்டாவை தினமும் சாப்பிட்டு வந்தா என்னென்ன அற்புதங்கள் உடலுக்குள் நடக்கிறது தெரியுமா?

கடல் உணவுகள், தமிழகத்தின் கடற்கரையோர மக்களின் அன்றாட உணவாகவும், பிற பகுதி மக்களின் தேவைக்கேற்ற உணவாகவும் திகழ்கிறது.

ஆஸ்துமா, இருமல், மூச்சிரைப்பு, முகத்தில் கரும்புள்ளிகள் போன்ற உபாதைகளை தீர்க்கும் எருக்கஞ் செடி

எருக்கஞ் செடியின் மருத்துவ பயன்பாடுகள் பற்றி விளக்குகிறது இந்த தொகுப்பு

நாம் அவ்வளவாகக் கண்டுகொள்ளாத எருக்கஞ்செடி, பல இடங்களில் காணப்படுகிறது. பார்ப்பதற்குச் சாதாரணமாகத் தோன்றினாலும் பல்வேறு மருத்துவக் குணங்கள் கொண்டது எருக்கு. அவை பற்றி...

எருக்கின் இலை, பூ, வேர், பால் அனைத்தும் சிறப்பான மருத்துவ குணங்கள் நிறைந்தவை. எருக்கம் இலையை வதக்கிக் கட்ட, கட்டிகள் பழுத்து உடையும். செங்கல்லைப் பழுக்கக் காய்ச்சி அதன் மீது எருக்கின் பழுத்த இலையை 4-5 வரிசை அடுக்கிக் குதிகாலால் அழுத்தி மிதித்து வர குதிகால் வாயு நீங்கும்.

இலைகளைக் காய வைத்து எரித்து, அதிலிருந்து வரும் புகையை மூக்கினுள், இழுக்க, ஆஸ்துமா இருமல் போன்ற உபாதைகள் குறைந்துவிடும்....

இலையை வாட்டி வதக்கிப் பிழிந்தெடுத்த சாறு, மூக்கினுள் 4- 6 சொட்டுகள் விட, உள்ளே அடைபட்டிருக்கும் கெட்டியான சளி கரைந்துவிடும். இதைக் காலையிலும், மாலையிலும் அளவுமிகாமல் கவனத்துடன் விட, தும்மலை ஏற்படுத்தி, மூக்கடைப்பை நீக்கிவிடும்.

பழுத்த இலைகளின் சாற்றை, நல்லெண்ணெய்யுடன் கலந்து, வெதுவெதுப்பாக காதினுள் விட்டுவர காதுவலி, செவிடு போன்ற காது சம்பந்தப்பட்டப் பிரச்னைகள் விரைவில் குணமாக வாய்ப்பிருக்கிறது.

இலைகளை மூட்டை கட்டி, சூடாக்கி, வெதுவெதுப்பாக நெஞ்சு மற்றும் வயிற்றுப் பகுதிகளில் ஒத்தடம் கொடுத்தால் அங்கு ஏற்படும் வலி குறைந்துவிடும்.

காய்ந்த இலைகளைப் பொடித்து, புண்கள் மீது தூவ, அவை விரைவில் ஆறிவிடும். இலைச்சாறு மஞ்சள் தூளுடன் கலந்து கடுகெண்ணெய்யில் வேக வைத்து, தோலில் ஏற்படும் படை, சொறி, சிரங்குகளில் பூசி வர, விரைவில் குணமாகும்.

இலைகளையும்,பூக்களையும் ஒன்றாக வேக வைத்த தண்ணீரை கினியா வோர்ம் எனும் புழுக்களை ஒழிக்க, அது பாதித்துள்ள கை,கால் பகுதிகளை முக்கி வைக்கலாம். ஆசனவாய் வழியாகச் செலுத்திக் குடலையும் சுத்தப்படுத்தலாம்.

எருக்கம் பூக்களைப் பொடித்து கருங்காலிக் கட்டை போட்டு வெந்தெடுத்த தண்ணீரில் சிட்டிகை கலந்து காலை மாலை வெறும் வயிற்றில் சாப்பிட, குஷ்டம் எனும் கொடிய நோயின் தாக்கம் குறைந்துவிடும்.

எருக்கம் பூ நன்கு ஜீரண சக்தியை ஏற்படுத் தக்கூடியது. இருமல், சளி அடைப்பினால் ஏற்படும் மூச்சிரைப்பு நோய், பிறப்பு உறுப்புகளைத் தாக்கும் சிபிலிஸ், கொனோரியோ போன்ற உபாதைகளைக் குணப்படுத்தும். காலரா உபாதையில் இதன் பயன்பாடு நல்ல பலனைத் தருகிறது.

எருக்கம் வேர்த் தோலை விழுதாக வெந்நீருடன் அரைத்துச் சாப்பிட, உடல் உட்புறக் கொழுப்புகளை அகற்றி, வியர்வையைப் பெருக்கும். அதிக அளவில் சாப்பிட்டால் வாந்தியை ஏற்படுத்தும். வேர்த்தோலை அரிசி வடித்த கஞ்சியுடன் அரைத்து யானைக்கால் நோயில் பற்றிடலாம்..

தேள் கடித்த இடத்தில் எருக்கின் பாலைத் தடவி வர உடனே குறையும். பாம்புக் கடியிலும் இதைப் போலவே பயன்படுத்தலாம்.

மஞ்சள் தூளுடன் எருக்கம்பாலைக் கலந்து முகத்திலுள்ள கரும்புள்ளிகள், நிறமாற்றம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் பூசி வருவது நல்லது.

எருக்கு இலைச்சாறு 3 துளி, 10 துளி தேனில் கலந்துகொடுக்க, வயிற்றுப் புழுக்கள் வெளியேறும்.

எருக்கம் வேரைக் கரியாக்கிப் பொடித்து விளக்கெண்ணெய் கலந்து மேற்பூச்சாகப் பயன்படுத்தினால் கரப்பான், பால்வினை நோய் புண்கள், ஆறாத காயங்கள் தீரும். 
மருத்துவர்களின் ஆலோசனைகளின் பேரில் இந்த மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டும்.

Arunpandiyan Tue, 02/05/2019 - 14:11
erukku health medicinal use herbal erukku லைப்ஸ்டைல் ஆரோக்கியம்

English Title

Medicinal uses of erukku plant

News Order

0 
mudakathan

பிரசவ வேதனையைக் குறைத்து சுகப்பிரசவம் தரும் முடக்கத்தான் செடி மூலத்தைப் போக்கும் சிறந்த மலமிளக்கி தெரியுமா?

முடக்கத்தான் ஒரு மருத்துவ மூலிகைக் கொடியாகும். இது உயரப் படரும் ஏறுகொடி. இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்கள் சிறிய வெள்ளை நிற இதழ்கள் கொண்டவை. இக்கொடியின் வேர், இலை, விதை...


stomach wormb

அடிக்கடி வெளியில் சாப்பிடுபவர்கள், குழந்தைகளுக்கு தீராத தொல்லை தரும் குடற்புழுக்களில் இருந்து தப்பிப்பது எப்படி?

குழந்தை சரியாகச் சாப்பிடாமல் வயிற்றுவலியால் அவதிப்பட்டால், குழந்தைக்குக் குடல்புழு பாதிப்பு இருக்கலாம் என அம்மாக்கள் நினைப்பார்கள். அந்த அளவுக்குக் குழந்தைகளைப் பரவலாகப் பாதிக்கக்க...

2018 TopTamilNews. All rights reserved.