நாச்சியார் படத்தில் ஜி.வி.க்கு பதில் நடித்திருக்க வேண்டியவர் யார் தெரியுமா?

ajith-vignesh-with-vivek
ajith-vignesh-with-vivek


நாச்சியார் படம் தொடங்கவிருந்த நேரம் அது.இயக்குநர்  பாலா தீவிர கதைவிவாதத்தில் இருக்கிறார். இதற்காக சென்னை வடபழநியில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தார். தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகர்களில் பலருக்கும் இயக்குநர் பாலாவின்  இயக்கத்தில் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். ஆனால் பாலாவே ஒரு நடிகரை தன் படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று ஆசைபட்டார். 

director-bala


 
விஜய் நடித்த பிகில் படத்தில் தன் காதலி மீது ஆசிட் வீசும் இளைஞராக நடித்திருப்பார் அஜித் விக்னேஷ். துறு துறு என்று இருக்கும் அவர் சில காட்சிகளிலேயே வந்தாலும் முகபாவனையில் தேர்ந்த நடிகாராக தன்னை காட்டியிருப்பார்.  இவரைதான் இயக்குநர் பாலா தன் படத்தில் நடிக்க வைக்க ஸ்கிரின் டெஸ்ட் மேக்கப் எல்லாம் போட்டு பார்த்து தேர்வு செய்து வைத்திருந்தார். 

ajith-vignesh

தான் இயக்கிய நாச்சியார் என்ற படத்திற்காகதான் அஜித் விக்னேஷை தேர்ந்தெடுத்து வைத்திருந்தார்.  அப்போது பொரியியல் படிப்பு படித்துக்கொண்டிநுததால் படிப்பை நிறுத்தக்கூடாது என்று அந்த இடத்தில் ஜி.வி.பிரகாஷ்குமாரை நடிக்க வைத்து விட்டார். அஜித் விக்னேஷை பாலாவிடம் அறிமுகம் செய்து வைத்தது நடிகர் விவேக். அவரின் வேண்டுகோளுக்காக இந்த வாய்ப்பை அவருக்கு கொடுக்க நினைத்தார். பாலா தேர்வு பொய் ஆகாது என்பது போல படிப்பை முடித்த அஜித் விக்னேஷிற்கு அடுத்த வாய்ப்பை வாங்கிக்கொடுத்தார்  நடிகர் விவேக். பிகில் படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த போது ஸ்பாட்டுக்கு வந்திருந்த அஜித் விக்னேஷை, இயக்குனர் அட்லீயிடம் அறிமுகப்படுத்தி வைத்திருக்கிறார் விவேக். முதல் சந்திப்பிலேயே ஓகே சொல்லிக் கொடுத்ததுதான் ஆஸிட் வீசும் இளைஞன் கேரக்டர்.

ajith-vignesh-with-viek