• November
    21
    Thursday

Main Area

Main



மீண்டும் ரஜினி பட தலைப்பை பிடித்த ஜி.வி.பிரகாஷ் 

ஜி.வி.பிரகாஷ்
ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளர் மற்றும் நடிகராக வளம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் தற்போது கைவசம் எக்கச்சக்க படங்களை வைத்துள்ளார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான குப்பத்து ராஜா,வாட்ச்மேன் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் உருவாகியுள்ள சிவப்பு மஞ்சள் பச்சை படம் ரிலீஸ்க்கு தயாராகவுள்ளது.   தற்போது இயக்குநர் எழில் இயக்கிவரும் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக ஈஷா ரெபா, சாக்ஷி அகர்வால், நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். மேலும், சதீஷ், ஆடுகளம் நரேன், வையாபுரி, மனோபாலா, கோவை சரளா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில்  நடித்துவருகின்றனர்.  

gv

இந்த நிலையில் இப்படத்தின் கிளைமேக்ஸ் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான கனல் கண்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமட்டுமின்றி இப்படத்திற்கு ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அவரின் பதிவில் குறிப்பிட்டுள்ளதன் மூலம் வெளிவந்துள்ளது. 

மேலும் இதே தலைப்பு கடந்த 1978ம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், லதா, விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹாரர் படம் ‘ஆயிரம் ஜென்மங்கள்’ என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி குப்பத்து ராஜா படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஜீ.வி.பிரகாஷ்  ரஜினி பட டைட்டிலில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

2018 TopTamilNews. All rights reserved.