kaappan-mobile kaappan-large
  • September
    17
    Tuesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


குட்கா ஓனரின் 'தங்க மாளிகை'...எங்கே இருக்கிறது தெரியுமா?

குட்கா
குட்கா
Loading...

வீட்டுச்சுவர்கள்,கழிப்பறைகள்,மாடிப்படிகள்,நடைபாதைகள் என
இந்தியாவையே பான்பராக் எச்சிலில் குளிப்பாட்டிய பணத்தில்,குட்கா தயாரிப்பாளர் தங்கமுலாம் பூசிய மாளிகை ஒன்றைக் கட்டியிருக்கிறார்.

gold palace

ரஷிக்லால்,ஆரம்பத்தில் இருந்தே சர்ச்சைக்குரிய நபராகவே இருந்திருக்கிறார். வருமானவரித் துறை முதல் சி.பி.ஐ வரை எல்லா ரைடுகளையும் பார்த்தவர்.
அறுபதாண்டுகளில் 10000 கோடி சம்பாதித்து விட்டு எச்சில் சுரப்பி புற்று நோயால் போய் சேர்ந்து விட்டார்.

ஒரு காலத்தில்,அவர்தான் ஃபிலிம்ஃபேர் அவார்டுக்கு நிரந்தர ஸ்பான்சர்.
தாவூத் இப்றாஹிமுடன் நட்பாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டவர்.
அவர் புனே நகரில் தன் குடும்பத்துக்காக இழைத்து இழைத்து ஒரு வீடுகட்டி இருக்கிறார்.சிமெண்ட், கம்பி,மணல் தவிர அத்தனையும் வெளிநாடுகளில் இருந்து இறகுமதி செய்யப்பட்ட சாதனங்கள்.பாத் ரூம் ஃபிட்டிங்குகள் உட்பட!

gold palace

வீட்டின் உட்புறத்தில் தங்கமுலாம் பூசிய விதான அலங்காரங்கள்,கண்ணாடி மற்றும் மர வேலைப்பாடுகள் எல்லாம் உலகக் கோடிசுவரர்களே பெருமைப்படும் அளவுக்கு ஏழு நட்சத்திரத் தரத்தில் இருக்கின்றன.
அரேபிய ஷேக்குகள்,அம்பானி, அதானி வீடுகளில் கூட இல்லாத கலைப்பொருட்களைக் கொண்டு வந்து குவித்திருக்கிறாராம்.

gutka

அத்தனையும், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு சுவைக்கும் புகையிலையும் பான்பராக்கும் விற்று அவர்களில் லட்சக்கணக்கானவர்களை புற்று நோய்க்கு பலிகொடுத்து கொன்று சம்பாதித்த காசு! அதனாலென்ன,நாய் விற்ற காசு குறைக்காது என்பது போல,பான்பராக் விற்ற காசு பளபளக்காதா என்று ஒரு புது மொழி செய்வோம்!

2018 TopTamilNews. All rights reserved.