• February
    28
    Friday

Main Area

Main



பாஜக ஆட்சியில் வளர்ச்சி..? கதிகலங்க வைக்கும் அபாய நிலை... இந்தியாவின் உண்மை நிலவரம் இதுதான்!


காஷ்மீர் விவகாரம், இந்திய பொருளாதாரம், ஊழல் நடவடிக்கைகள் என பாஜக அரசாங்கம் கூவி கூவி பெருமை பட்டுக் கொண்டாலும் இந்திய பொருளாதார நிலை கதி கலங்க வைத்துள்ளது. இந்தியா பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக மத்திய அரசு பெருமை பட்டுக் கொண்டாலும் சில விஷயங்கள் உண்மையில் நம்மை சிறுமை பட வைப்பதாகவே அமைந்துள்ளது. 

அப்படி பாஜக ஆட்சியில் நடந்த சில அதிர வைக்கும் நிகழ்வுகள் சில.. 
 ஜெட் ஏர்வேஸ் கதை முடிந்தது. ஏர் இந்தியா அதிக பட்ச நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. பி.எஸ்.எண்.எல் நிறுவனத்தில் 54,000 பேர் வேலை இழக்கும் அபாயத்தில் உள்ளனர். HAL நிறுவனத்தில் சம்பளம் போட பணமில்லை.  தபால் துறை 15000 கோடி ரூபாய் நஷ்டத்தில் என்ற செய்தி அபாய சங்கடிக்கிறது.

வீடியோகான் நிறுவனம் வங்கிக் கடனில் சிக்கி சீரழிந்து வருகிறது. டாடா டொகாமோ நசுக்கப்பட்டது. ஏர்டெல் நசுக்கப்பட்டது.  JP குரூப் கதை முடிந்தது.  ONGC ன் மிக மோசமான நிலையில் உள்ளது. அதிக அளவு கடன் வாங்கிய , நாட்டின் முதல் 36 பேர் தற்போது உள்நாட்டில் இல்லை.

 35 மில்லியன் கோடி அளவிலான கடன் தள்ளுபடி கேட்டு வரிசையில் பலர் காத்திருக்கின்றனர். பஞ்சாப் நேஷனல் வங்கி பரிதாபத்தில் இருக்கிறது.  மிச்சமிருக்கும் வங்கிகளும் தொடர் நஷ்டத்தால் திணறும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாட்டின் மீதான கடன் $ 131100 மில்லியன் டாலர். விற்பனையில் ரெயில்வே. செங்கோட்டை உட்பட நாட்டின் புராதான சின்னங்கள் வாடகைக்கு விடப்பட்டு வருகிறது.
 
பணமதிப்பிழப்பிற்கு பின் வேலையிழந்து திண்டாடும் பல லட்சம் பேர். 45 வருடங்களாக இல்லாத - வேலைவாய்ப்பின்மை. முந்தைய ஆட்சியில் இறந்தவர்களை விட மூன்று மடங்கு அதிக - படை வீரர்கள் உயிரிழப்பு.  5 விமான நிலையங்கள் அதானிக்கு விற்பனை.  உள்நாட்டு உற்பத்தி / தேவைகள் வீழ்ச்சி.  நாட்டின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனம் மாருதி - தனது உற்பத்தியை குறைத்தது.  வாங்க ஆளில்லாமல் - 
Rs. 55000 கோடி மதிப்பிலான கார்கள் தயாரிப்பு தொழிற்சாலைகளில் கிடக்கின்றன. இப்படி இன்னும் எத்தனையோ வகைகளில் நாடு வீழ்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது.  
 

2018 TopTamilNews. All rights reserved.