• February
    29
    Saturday

Main Area

Main



அரசாங்கத்திடம் பணம் நிறைய இருக்கு, ஆனால் அதிகாரிகளிடம் நேர்மறையான எண்ணம் இல்லை... நிதின் கட்கரி அதிரடி பேச்சு

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

நாக்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசுகையில் கூறியதாவது: நான் உங்களிடம் உண்மை சொல்வேன். அரசிடம் பணத்துக்கு பற்றாக்குறை இல்லை. அரசுடன் பணிபுரியும் மக்களிடம் நிலவும் எதிர்மறையான சிந்தனைதான் பிரச்சனை. அதனால் அவர்களால் எந்தவொரு முடிவுகளையும் எடுக்க முடியவில்லை.

அடிப்படை கட்டமைப்பு

ஆகையால் ஒரு உயர்ந்த அமைப்பு சென்றேன், அங்கே அவர்கள் தாங்கள் தொடங்குவதாக கூறினார்கள். இதனையடுத்து எதனை தொடருவீர்கள் என நான் கேட்டேன்? எதையும் தொடங்கும் அதிகாரம் இருந்தால் உங்களுக்கு இருந்தால், ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இங்கு வேலை பார்க்கிறீர்கள்? என கேட்டேன். எதிர்மறை அணுகுமுறை கொண்ட அரசு அதிகாரிகள் தற்போதைய பொருளாதார நிலைமைக்கு காரணம்.

அடிப்படை கட்டமைப்பு பணி

கடந்த 5 ஆண்டுகளில் ரூ.17 லட்சம் கோடி மதிப்பிலான அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்கான ஒப்பந்தங்களை வழங்கினேன். இந்த ஆண்டு எனது அமைச்சகம் ரூ.5 லட்சம் கோடியை அடிப்படை கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளில் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

2018 TopTamilNews. All rights reserved.