• August
    26
    Monday

Main Area

Main



பீட்டாவின் எதிர்ப்பையும் மீறி ரிலீஸ் தேதியை அறிவித்த ‘கொரில்லா’ படக்குழு...

ஜீவா-ஷாலினி பாண்டே
ஜீவா-ஷாலினி பாண்டே
Loading...

பறவை,விலங்குகளின் காவலன் என்று தன்னை அறிவித்துக்கொண்டு சினிமாக்காரகளை டார்ச்சர் செய்யும் பீட்டா வின் எதிர்ப்பையும் மீறி ஜீவா நடித்துள்ள ’கொரில்லா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு.

டான் சாண்டி இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் படம் கொரில்லா. காமெடி என்டர்டெயினர் ஜானரில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில் அர்ஜுன் ரெட்டி படத்தின் நாயகி ஷாலினி பாண்டே ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், சிறப்பம்சமாக நிஜ சிம்பான்சியும் படத்தில் நடித்துள்ளது. எனவே, சிம்பான்சியைத் திரைப்படத்தில் நடிக்கவைத்ததற்கு சர்வதேச விலங்குகள் நல அமைப்பான பீட்டா எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இதனால் ஜூன் 21ஆம் தேதி வெளியாகவிருந்த கொரில்லாவின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டது.

gorilla

இந்நிலையில் முறையான மருத்துவர் சான்றிதழ்களை வழங்கி சென்சாருக்கு அப்ளை செய்துள்ள ‘கொரில்லா’ படக்குழு, பாங்காங்கில் படப்பிடிப்பு நடக்கும் சமயமே விலங்குகள் நல வாரியத்திடம் முறையான அனுமதி பெற்றுதான் அனைத்தும் நடந்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். மேலும் கொரில்லா வரும் ஜூலை 5ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளது படக்குழு.

இதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை என்பதால் பீட்டாவுக்குப் போய்ச்சேர வேண்டிய பேட்டா சரியாகப்போய் சேர்ந்துவிட்டது என்று புரிந்துகொள்ளவேண்டியதுதான்.

2018 TopTamilNews. All rights reserved.