• August
    20
    Tuesday

Main Area

Main



கூகுளை அலங்கரித்திருக்கும் முதியவர் யார் தெரியுமா?

doodle
doodle
Loading...

கவிஞர் உமர் கய்யாம் என்பவரின் 971 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கூகுள் நிறுவனம் அவரது புகைப்படத்தால் டூடுலை அலங்கரித்துள்ளது. 

வடகிழக்கு ஈரான் நாட்டில் உள்ள நிசாபூர் என்ற நகரில் உமர் மே 18, 1048 -ஆம் ஆண்டு பிறந்தார். இவர் கவிஞராக மட்டுமல்லாமால் மெய்யியலாளர், கணிதவியலாளர் மற்றும் வானியியல் தொடர்பான துறையிலும் முத்திரை பதித்துள்ளார்.  இவரின் முழு பெயர் கியாஸ் ஒத் தீ அபொல் பத் இபர் இபின் எப்ராகிம் கய்யாம். சொல்வதற்கும் படிப்பதற்குமே மிகவும் டையர்டு ஆகி விடுவதால் உமர் கய்யாம் என சுருக்கி வைத்துக்கொண்டார். ஓராண்டு என்பது 365.24219858156 நாட்கள் என்பதனை மிகத் துல்லியமாக கணக்கிட்ட முக்கிய கணிதவியலாளராவர்.

h

கவிதைகள் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான உமரின் பாரசீகப் பாடல்களைக் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை தமிழில் மொழி பெயர்த்துள்ளார். உமர் தனது 83 வயதில் டிசம்பர் 4 ஆம் தேதி, 1131 ஆம் ஆண்டு மறைந்தார். இவரின் பிறந்த நாளை முன்னிட்டு கவுரவிக்கும் வகையால் டூடுலை அலங்கரித்துள்ளது. உமர் மறைந்தாலும் அவர் படைத்த கவிதைகளும், அவரின் கணித கூற்றுகளும் இன்றும் உயிர்பெற்றுதான் இருக்கின்றன.

2018 TopTamilNews. All rights reserved.