• December
    16
    Monday

Main Area

Mainஆடி மாதத்தில் அதிர்ஷ்டம் தரும் சகஸ்ர நாமம்

சகஸ்ர நாமம்
சகஸ்ர நாமம்

ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்று சொல்கிற அளவிற்கு மகத்துவம் வாய்ந்த மாதமாக இருக்கிறது ஆடி. அதே போல எத்தனை தெய்வங்களை வழிபட்டு வந்தாலும், அம்பிகையைக் குறிப்பிடும் போது லோக மாதா என்றே சொல்கிறோம். நமது இந்து மதத்தின் வழிபாட்டு முறைகள்  நீண்ட கால பாரம்பர்யத்தைக் கொண்டது. வாரந்தோறும் வழிபாடுகள், மாதந்தோறும் விழாக்கள், வருடந்தோறும் திருவிழாக்கள் என தெய்வங்களை விடாது கொண்டாடும் வழிமுறையில் வந்தது இந்து மத ஆன்மிக வழிபாடு. 

god

வருஷந்தோறும் விழாக்கள் இருந்தாலும், அம்பிகையை வழிபாடுவது நமது நாட்டின் மிகப்பெரிய கலாச்சாரமுறை. பொதுவாக செவ்வாய் , வெள்ளி  நாட்களில்  அம்பிகை பூஜை , அம்பிகை கோவில் , விளக்கு பூஜை, மாவிளக்கு, நாக வழிபாடு , எலுமிச்சை விளக்கு என ஊரே அம்பிகையை வழிபடுவதில் களைக்கட்டும். நவராத்திரியும், ஆடி மாத வழிபாடும் அம்பிகை வழிபாட்டில் மிகவும் பிரசித்தி பெற்றது. சக்தி வழிபாடு அம்பிகையினை லலிதா திரிபுர சுந்தரியாகவும், தீமைகளை அழிக்கும் காளி மாதாவாகவும் இருமுறைகளில் வழிபடுவர். அதிலும் ஆடிமாதத்தில் சூரிய வெப்பம் குறைய ஆரம்பிக்கும். மழை ஆரம்பிக்கும் காலம் இது. அம்பிகை என்றாலே குளுமை தானே. ஆடிச்செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு இவை அனைத்துமே சிறப்பு வாய்ந்தவை தான். ஆடிப்பூரம், ஆண்டாள் பிறந்த தினம், அம்பாளுக்கு வளைக்காப்பு அணிவித்து கொண்டாடுவர். அம்பாளுக்கு இந்த மாதத்தில் வளையலை அணிவித்து மகிழ்வது அவரவர் சந்ததியினரை காக்கும். 

god

பெளர்ணமிக்கு முன்னர் வரும் வெள்ளிக்கிழமையை வரலட்சுமி பூஜையாகக் கொண்டாடுவர். கேட்ட வரம் தரும் லட்சுமி என்ற பொருள்படும் பண்டிகை இதுவாக கொள்ளப்படுகிறது.  மாலை நேரங்களில்  தமிழ்ப்பாடல்கள், மகிஷாசுரமர்த்தினி ஸ்லோகங்கள் , அபிராமி அந்தாதி, லலிதா சகஸ்ர நாமம் என அவரவர் குடும்ப வழக்கத்திற்கேற்ப துதிகளை மேற்கொள்வர். இதில் மிகவும் விசேஷமாக கருதப்படும் லலிதா சகஸ்ரநாமம் என்று அம்பிகையை ஆயிரம் நாமங்கள் கொண்டு துதிக்கும் முறையின் சிறப்பினை பற்றி காண்போம்.

god

லலிதா என்றால் விளையாடுபவள் என்று பொருள். ஆம் இந்த உலகில் அன்னை லோகமாதா நம் அம்மா தானே. நாமெல்லாம் அவளின் குழந்தைகள் தானே? நாம் ஏன் வாழ்க்கையை சுமையாகவும், கடினமாகவும் கொண்டு வாழவேண்டும். மகிழ்வாக சகல நன்மைகளையும்  பெற்று வாழ்ந்து பின் அன்னையையே சேர்ந்து விடலாம். லலிதா சகஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் 36 பிரிவாக லலிதோபகன்யா என்று வருகின்றது. 

god

அகத்திய முனிவருக்கும், ஹயக்கிரீவருக்கும் இடையே நடைபெறும் சம்பாசஷணையாக இடம் பெற்றுள்ளது.  மஹாவிஷ்ணுவின் மறு உருவமே. ஹயக்கிரீவர். கல்விக்கான கடவுள் இவர் தான். அப்படிப்பட்ட ஹயக்கிரீவர், அகத்தியரிடம் லலிதமகா திரிபுரசுந்தரியின் மகிமைகளை எடுத்துச் சொல்கிறார். ஸ்ரீ புரம் எனும் அம்பிகையின் ஊரைப் பற்றி விவரிக்கின்றார். தேவதைகளை நோக்கி, நான் உங்களுக்கு கட்டளையிடுகிறேன் யார், யார் ஸ்ரீசக்ரம், ஸ்ரீவித்யா மற்றும் பிற மந்திரங்களை அறிந்தவர்களோ அவர்கள் என்னைப் பற்றி கூறும் ஆயிரம் நாமங்கள் கொண்ட சுலோகங்களை உருவாக்குங்கள். என் பக்தர்கள் இதனை சொல்லி என்னை வந்து அடையும் பாதையாக அமையட்டும் என்கிறார். 

அதனைக் கேட்டு வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகள் மிக ரகசியமான மந்திரமாக லலிதா சகஸ்ரநாமம் ஸ்லோகத்தினை உருவாக்கினார்கள். ஒரு நாள், தன்னுடைய சிம்மாசனத்தில் அமர்ந்து இருந்தாள். அன்னை. அப்போது வாசினி உட்பட எட்டு தேவதைகளையும் லலிதா சகஸ்ரநாமத்தை உச்சரிக்க கண்களால் ஆணையிட்டாள். இதைக் கேட்டு மனம் குளிர்ந்த லோகமாதா “குழந்தைகளே வாசினி உட்பட எட்டு வாக்கு தேவதைகளால் கூறப்பட்ட இந்த சகஸ்ரநாமம் உலக நன்மைக்காக என் இசைவால் கூறப்பட்டது. இதனைப் படிப்பவர்கள்  அனைத்து நன்மைகளையும் பெற்று என்னை வந்து அடைவார்கள் என்றாள். அதனால் தான் இன்று வரை லலிதா சகஸ்ரநாமம் மிக சக்தி வாய்ந்த ஸ்லோகமாக கருதப்படுகிறது. 

பக்தியோடு இதனைச் சொல்லி வர நோய்கள் விலகும். லலிதா என்றால் அழகு என்று பொருள். ஞான மார்க்கமாக வழிபடும் பொழுது ஸ்ரீ வித்யா என்று பொருள் படும். ஞான அறிவு கிட்டும். அனைத்து ஆத்மாவின் உள்ளும் இருக்கும் அம்பிகையினை உணர முடியும். அளவிட முடியாத அம்பிகையின் அருளினை உணர முடியும். உள்ளுணர்வு கூடும். அந்த உள்ளுணர்வே அம்பிகை தான் என்று புரியும். சக்தி வழிபாட்டினை ஸ்ரீ என்ற எழுத்தின் மூலம் வழிபடுவது தான் ஸ்ரீ வித்யா. நமது இந்த பிரபஞ்சமே ஸ்ரீசக்கரம் தான்.மந்தர , ய்ந்தர, தந்தர என்ற மூன்றும் இணைந்ததே ஸ்ரீ வித்யா வழிபாடு. பிரம்ம வித்தையும் ஸ்ரீ வித்தையும் ஒன்றே.  லலிதா சகஸ்ர நாமத்தினையும், ஸ்ரீவித்யாவையும் படிக்கப் படிக்க ஜாதி, மத, இன வேறுபாடுகள் கிடையாது. உயர் பண்புகளை தன்னுள் வளர்த்துக் கொள்வோர் அனைவரும் படிக்கலாம். இதனை தினமும் சொல்வது புனித நீரில் நீராடிய புண்ணியத்தினை தரும். 

god

உணவுப்பொருள், நிலம், பசு தானம் செய்த புண்ணியம் கிடைக்கும். குழந்தை வரம் வேண்டுவோர் குழந்தை பாக்கியம் பெறுவர். அன்றாடம் சொல்வதால் தீமைகள் விலகும். பூஜை செய்யும் முறைகளில் செய்யும் தவறுகளால் ஏற்படும் பாவம் நீங்கும். அன்றாட நித்திய பூஜை முறைகளையும் அவரவர் குடும்ப வழி பூஜைகளையும் செய்யாது இருப்போருக்கு ஏற்படும் பாவம் நீங்கும். கிரக தோஷங்களால் ஏற்படும் தீமைகள் நீங்கும். எதிரிகள் நீங்குவர். வெற்றி கிட்டும். பொன், புகழ், பொருள் சேரும். லலிதா சகஸ்ர நாமம் தினசரி சொல்வது ஒரு தவம். இறைவனுக்கு வேறு எதனையும் அளிக்க வழி இல்லை. எனினும் இந்த நாமத்தினை சொல்வதே போதும். தன்னம்பிக்கை கூடும். லலிதாம்பிகையே ஸ்ரீகாளி மாதா, துர்கா தேவி, பராசக்தி, பகவதி, பிரபஞ்சத்தின் தாய். ஒவ்வொரு நாமமும் மிகவும் சக்தி வாய்ந்தது. படிக்க ஆரம்பித்தால் ஆயிரம் நாமத்தினையும் ஒரே நேரத்தில் முழுமையாக சொல்லிவிட வேண்டும்.
அம்பிகையின் துதி நூல்களில் முதலிடம் வகிப்பது ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்.  பிரம்மதேவரிடம் இருந்து அசுரன் ஒருவன் வேதங்களைக் கவர்ந்து கொண்டு போன போது, மகாவிஷ்ணு ஹயக்ரீவராக (குதிரை முகம் கொண்டவராக) வந்து, அசுரனைக் கொன்று, வேதங்களை மீட்டார். ஞானத்தின் வடிவமே ஹயக்ரீவர். அப்படிப்பட்டவர், லலிதா ஸஹஸ்ர நாமத்தை உபதேசம் செய்திருக்கிறார். உபதேசம் பெற்ற அகத்தியரின் பெருமையோ, அளவில் அடங்காது, அதில் ஒன்றை மட்டும் இங்கே பார்க்கலாம். 
சிவனுக்கும் பார்வதிக்கும் திருமணம் நடந்தபோது மகாவிஷ்ணு, பிரம்மா, இந் திரன் முதலான தேவர்கள் அனைவரும் அங்கு கூடினார்கள். அதன் காரணமாக, வடகோடு தாழ்ந்து தென்கோடு உயர்ந்தது. அப்போது சிவபெருமான் அகத்தியரைத் தென்திசைக்கு அனுப்ப, பூமி சம நிலை பெற்றது. இந்தக் கதை அனைவருக்குமே தெரிந்தது தான். ஆதியும் அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான சிவபெருமான் முதல் தேவர்கள் வரை அனைவரும் ஒரு பக்கம் இருக்க, அகத்தியர் மட்டும் தென்திசை போனார். அதனால் பூமி சமநிலை ஆனது என்றால் என்ன பொருள்? 

shivan parvathi

அந்தப் பக்கம் இருந்த அவ்வளவு பேருக்கும் சமமானவர் அகத்தியர் என்பது தானே இதன் பொருள்? அதாவது, அனைத்து தெய்வங்களுக்கும் சமமானவர் அகத்தியர். அப்படிப்பட்ட மகாபுருஷர் லலிதா சகஸ்ரநாமத்தை உபதேசம் பெற்றிருக்கிறார். 
ஞானத்தின் வடிவமான ஹயக்ரீவர் உபதேசிக்க, அதை அனைத்து தெய்வங்களுக்கும் சமமான அகத்தியர் கேட்டிருக்கிறார் என்றால், ஸ்ரீலலிதா சகஸ்ரநாமம் எந்த அளவுக்கு உயர்ந்ததாக மேன்மையானதாக இருக்க வேண்டும். 
பதினெட்டு புராணங்களில் ஒன்றாகிய பிரம்மாண்ட புராணத்தில், லலிதோபாக்யானம் என்ற பகுதியில் லலிதா தேவியின் திரு அவதாரமும், சரிதமும் கூறப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக, அன்னை பராசக்தியின் ஆயிரம் திருநாமங்களைக் கூறும் லலிதா சகஸ்ரநாமம் என்னும் மகோன்னதமான இந்த ஸ்தோத்திரம் உள்ளது. அகத்தியரும், அவரது மனைவி லோபா முத்திரையும் சக்தி வழிபாட்டு நெறிகளை உருவாக்கிய குருமார்களில் முதன்மையாக வைத்துப் போற்றப்படுபவர்கள் 
சகஸ்ரநாம நூல்களிலேயே தனித் துவமும், தனிச்சிறப்பும் மிக்கதாக லலிதா ஸஹஸ்ரநாமம் உள்ளது. அபாரமான கவித்துவமும், சொல்லழகும், ஓசை நயமும் கொண்டது. இவ்வளவு சிறப்புகள் பெற்று தன்னுள் அனைத்து தெய்வ சக்திகளையும் அடக்கியுள்ள லலிதா ஸஹஸ்ர நாமத்தை நாமும் கூறுவதால் 
வாழ்வில் சகல சந்தோஷங்களையும் அனுபவிக்கலாம். இந்த ஆடி மாதத்தின் அம்மன் வழிபாட்டினை லலிதா சகஸ்ர  நாமத்துடன் ஆரம்பியுங்கள்.

2018 TopTamilNews. All rights reserved.