• March
    29
    Sunday

Main Area

Main



இந்தியா அதை கட்டாயம் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்! எச்சரிக்கை செய்த பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர்....

கீதா கோபிநாத்
கீதா கோபிநாத்

மத்திய அரசின் மொத்த செலவுக்கும், வருவாய்க்கும் இடையிலான வித்தியாசம் நிதிப்பற்றாக்குறையாகும். மத்திய பட்ஜெட்டில் இந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதம் அளவுக்கு வைத்திருக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதாவது இந்த நிதியாண்டில் நிதிப்பற்றாக்குறை ரூ.7.03 கோடியை தாண்டக் கூடாது என மத்திய அரசு கட்டுப்பாட்டு இலக்கை நிர்ணயித்தது.

நிதிப்பற்றாக்குறை

ஆனால் நினைத்தது ஒன்று நடப்பது ஒன்றாக உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களிலே (ஏப்ரல்-அக்டோபர்) மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை மத்திய பட்ஜெட்டில் நிர்ணயித்த இலக்கில் 102 சதவீதத்தை எட்டி விட்டது. கடந்த அக்டோபர் வரையிலான 7 மாதத்தில் மத்திய அரசின் நிதிப்பற்றாக்குறை ரூ.7.20 லட்சம் கோடியாக உள்ளது. இதனால் நிதிப்பற்றாக்குறை இலக்கை மத்திய அரசு சிறிது தளர்த்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருவாய் பெருக்க வேண்டும்


டெல்லியில் நேற்று பிக்கியின் 92வது மாநாட்டில் கலந்து கொண்ட பன்னாட்டு நிதியத்தின் தலைமை பொருளாதார நிபுணர் கீதா கோபிநாத் பேசுகையில் கூறுகையில், இந்தியாவை பொறுத்தவரை பெரிய நிலைத்தன்மை மிகவும் முக்கியம். அதாவது நிதி விஷயத்தில் ஸ்திரத்தன்மை இருக்க வேண்டும். ஆகையால் நிதிப்பற்றாக்குறை இலக்கை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியம். அதற்காக செலவினங்களை முறைப்படுத்துவதுடன், வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.