• February
    25
    Tuesday

Main Area

Main



ஆபீஸ் அட்டகாசம்  -கூட வேலை செய்தவர்களால் குதறி எடுக்கப்பட்ட பெண் -இறந்த இளம்பெண் குடும்பத்தினர் குமுறல்..  

மதுரா
மதுரா

நொய்டாவில் யமுனாவின்  அதிவேக நெடுஞ்சாலையில் வேகமாக வந்த கார் மோதியதால்  நொய்டாவைச் சேர்ந்த 20 வயது பெண், டெல்லி மருத்துவமனையில்  இறந்தார். ஆனால் , அவரது நண்பர்கள் இருவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்ததாக  அந்த பெண்ணின் குடும்பத்தினர் கூறினர். 

harassment

நொய்டாவின்  உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த அந்தப் பெண், சகஆண்  ஊழியர்கள்  மூன்று பேருடன்   மதுராவுக்குச் சென்று திரும்பும்போது வெள்ளிக்கிழமை மாலை விபத்தை சந்தித்ததாக போலீசார் தெரிவித்தனர். .

இந்த சம்பவம் யமுனா அதிவேக நெடுஞ்சாலையில் 66 வது மைல்கல்லில் மதுராவிலிருந்து திரும்பி வந்தபோது நடந்தது என்று போலீசார் தெரிவித்தனர்.

"மதுராவுக்கு போவது  குறித்து அந்தப் பெண் தனது குடும்பத்தினருக்கு தெரிவிக்கவில்லை. நான்கு பேரும் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் சென்று திரும்பி வரும் வழியில், நவ்ஹில் டோல் பிளாசாவில், அப்பெண்  ஓய்வு அறையைப் பயன்படுத்த விரும்பி, தனது நண்பரை பைக்கை  நிறுத்தச் சொன்னார்.

toll

அப்போது வேகமாக வந்த ஒரு  வாகனம் அவரை இடித்துவிட்டு  தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மற்ற இருவரும் அந்த இடத்திலிருந்து தொலைவில் இருந்தனர். அப்போது அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு அவர்கள் ஓடி வந்து பெண்ணை  உடனடியாக  யூதரில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .பிறகு  அங்கிருந்து டெல்லியின் ஜிடிபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார், ஆனால் அங்கு அங்கு அவர் இறந்தார் . 

gtp

ஆனால் சனிக்கிழமையன்று, அவர்  அவருடன் வந்த இரண்டு நபர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தாக்கப்பட்டதால் இறந்தார்  என்று இறந்த பெண்ணின்  குடும்பத்தினரிடமிருந்து போலிஸாருக்கு புகார் வந்தது,.

இதனையடுத்து, பாலியல் பலாத்காரம் மற்றும் கொலைக்கான இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் மற்றும் நொய்டாவில் உள்ள பிரிவு 49 காவல் நிலையத்தில்  எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்தார்.

"ஜிடிபி மருத்துவமனையிலிருந்து பிரேத பரிசோதனை அறிக்கை பெண்ணின்  மரணத்திற்கான காரணத்தை அறிய காத்திருக்கிறது. விசாரணை நடந்து வருகிறது, " என்று காவல்துறை அதிகாரி மேலும் தெரிவித்தார்.

2018 TopTamilNews. All rights reserved.