• August
    21
    Wednesday

Main Area

Main



சிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கிய வாரிசு நடிகர்! வைரல் வீடியோ! 

சிம்பு
சிம்பு
Loading...

சென்னை: நடிகர் கவுதம் கார்த்திக், சிம்புவிடம் ஆட்டோகிராப் வாங்கும் விடியோவை வெளியிட்டுள்ளார். 

தமிழ் சினிமாவில் நடிகர், பாடகர், இயக்குனர், இசையமைப்பாளர் என்று ஆல் ரவுண்டராக வலம் வருபவர் சிம்பு. சிறு வயதிலே சினிமாவில் எண்ட்ரி கொடுத்த இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் மாநாடு படத்தில் நடிப்பதற்காக வெளிநாட்டுக்கு சென்று தனது உடை இடையைப் பாதியாக குறைத்து மிகவும் ஸ்லிம்மாக காட்சியளிக்கிறார். 

இதற்கிடையில் அவர் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான 'முஃப்தி' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் நடிகர் கவுதம் கார்த்திக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தநிலையில்  ஷூட்டிங் இடையே சிம்புவிடம், கவுதம் கார்த்திக் ஆட்டோகிராப் வாங்கியுள்ளார். 

அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் கவுதம் கார்த்திக் வெளியிட்டுள்ளார். அதில்  'சிம்பு ஒரு மிகச்சிறந்த மனிதநேயம் உள்ளவர். அவருடைய ரசிகனாக அவருடன் சேர்ந்து நடிப்பதில் எனக்கு மிகவும் பெருமை' என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் முதல் முறையாகச் சிம்பு- கவுதம் கார்த்திக் இணைந்ததிருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

2018 TopTamilNews. All rights reserved.