• November
    21
    Thursday

Main Area

Main



காம்பீர் சார்பாக பெண் வேட்பாளரை அசிங்கமாக விமர்சித்து நோட்டீஸ்; சர்ச்சை?!..

சர்ச்சையில் சிக்கிய கவுதம்
சர்ச்சையில் சிக்கிய கவுதம்

மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி தேர்தல் நடைபெற்று வருகிறது. தற்போது மக்களவைத் தேர்தலில் 5 கட்டங்கள் முடிவடைந்துள்ளது. டெல்லியில் மே 12-ஆம் தேதி 6-ஆம் கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான இறுதிகட்ட பிரசாரப் பணிகள் சூடுபிடித்து வருகிறது. கிழக்கு டெல்லி மக்களவை தொகுதியில் பாஜக சார்பாக முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் போட்டியிடுகிறார். இந்நிலையில் கவுதம் காம்பீர் சார்பாக வழங்கப்பட்ட நோட்டீஸ் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

gau

காம்பீர் சார்பாக வழங்கப்பட்ட நோட்டீஸில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் அதிஷியை தரம்தாழ்ந்து விமர்சித்திருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து அதிஷி, என்னைப் பற்றி மிக மோசமாக விமர்சித்து நோட்டீஸ் வழங்கியுள்ளார். இவரை போன்றவர் வெற்றி பெற்றால், பெண்கள் பாதுகாப்புக்கு என்ன உத்தரவாதம் என கேள்வி எழுப்பியுள்ளார்.

aam

அந்த நோட்டீஸில் அதிஷிக்கும், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கும் தொடர்பு என அச்சிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து மணிஷ் சிசோடியா, காம்பீர் இப்படி தரக்குறைவான செயலில் ஈடுபடுவார் என நான் எதிர்பார்க்கவில்லை. அவரது செயல்கள் அதிஷி மீது தொகுதி மக்களுக்கு தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடும், இதை அவர் நிறுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

2018 TopTamilNews. All rights reserved.