• July
    24
    Wednesday

Main Area

full moon day
இந்த ராசி, நட்சத்திரம் எல்லாம் சந்திர கிரகண பரிகாரத்தை செய்ய மறக்காதீங்க!

இந்த வருஷத்தின் இரண்டாவது சந்திரகிரகணம் நாளை நிகழ இருக்கிறது. சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் போது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திர கிரகணம் உண்டாகிறது.  சரியாக 12.13 மணிக்கு தொடங்கும் இந்த சந்திர கிரகணம் பின்பு, நள்ளிரவு 1.31 மணிக்கு உச்சம் அடைந்து, இரவு 3 மணிக்கும், பின்னர், 4.30 மணிக்கு முடிகிறது. ஒட்டு மொத்தமாக சுமார் 5 மணி நேரம் இந்த கிரகணம் நடைபெறவுள்ளது.

full moon

சாஸ்திரங்களின் கூற்றுப்படி சந்திர கிரகண காலத்தில் நாம் செய்யும் மந்திர ஜபங்களுக்கு சக்திகள் அதிகம். சாதாரண நாளில் நாம் செய்யும் மந்திர ஜபங்கள், சந்திரகிரகணத்தின் போது ஒன்றுக்கு லட்சம் மடங்கு பலன்களைத் தரும். எனக்குத் தான் மந்திர ஜபங்கள் எதுவும் தெரியாதே என்று முழியை பிதுக்காமல், உங்களுக்குத் தெரிந்த குலதெய்வத்தை வழிபடலாம். நம்முடைய நல்ல கர்மாக்களின் மூலமாக புண்ணிய பலன்களைப் பெருக்கிக் கொள்வதற்கு உகந்த நேரமாக கிரகண நேரத்தைச் சொல்கிறார்கள். சாஸ்திரங்களில் கிரகண காலத்தை புண்ணிய காலத்தைப் போன்ற முக்கியத்துவம் வாய்ந்தது என்கிறார்கள்.  கிரகண காலத்தின் போதான  ஜபத்துக்குப் பிறகு மறைந்த நம் முன்னோர்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொண்டு தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.  சந்திர கிரகணம் முடிந்ததும் மறுபடியும் தலைக்கு குளித்து விட்டு தர்ப்பணம் ஆகியவை செய்யவேண்டும். கிரகணம் முடிந்த பிறகு தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் ஆடி மாதமும் பிறப்பதால், சந்திர கிரகணத்தை முன்னிட்டு செய்யக் கூடிய தர்ப்பணத்துடன், ஆடி மாதம் பிறந்த பிறகு மறுபடியும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும்.

full moon

அது தான் ஒருமுறை தர்ப்பணம் கொடுத்து விட்டாயிற்றே என்று இருந்து விடாதீர்கள். நிச்சயமாக இருமுறைகள் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். மறுபடியும் நீராடவேண்டும். 
ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய நட்சத்திரங்களிலும், கிருத்திகை, உத்திரம், உத்திராடம் ஆகிய நட்சத்திரங்களிலும் பிறந்தவர்கள் இந்த சந்திரகிரகணத்தை முன்னிட்டு உரிய சாந்தி பரிகாரங்களைச் செய்து கொள்ளுங்கள். இந்த ராசி, நட்சத்திர வாசகர்கள் எல்லாம் மறக்காம பரிகாரத்தை செய்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களது வாழ்வில் ஏற்றம் தான்!

ttnnewsdesk Mon, 07/15/2019 - 19:32
full moon day astrology  சந்திர கிரகணம் ஆன்மிகம்

English Title

Don't forget to do the eclipse of this zodiac and star!

News Order

0

Ticker

0 
பூரண சந்திர கிரகணம்

பூரண சந்திர கிரகணம்... இதையெல்லாம் செய்யாதீங்க!

ஒரே நேர்கோட்டில் சூரியன், பூமி, சந்திரன் வரும் போது பூமியின் நிழல் சந்திரனில் விழுவதால் சந்திர கிரகணம் உண்டாகிறது.  அப்படி உருவாகும் சந்திரகிரகணத்தின் போது சில விஷயங்களை அறிவியல் ர...

ஆனி பௌர்ணமி

இன்று ஆனி பௌர்ணமி... மாங்கல்ய பாக்கியம், காதலில் வெற்றி, கல்வியில் முன்னேற்றம்னு எல்லா பலன்களுக்குமான பூஜை

சூரியனோட வடக்கு திசை நோக்கிய பயணத்தின் இறுதி மாசம் ஆனி மாசம். தமிழ் வருஷத்தோட கணிப்புபடி சித்திரை, வைகாசி அடுத்து மூன்றாவது மாசமாக ஆனி மாசம் வருது. ஆனி மாசத்துல வர்ற ரொம்ப விசேஷமான...

2018 TopTamilNews. All rights reserved.