• August
    20
    Tuesday

Main Area

Main



நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க 3-வது முறையாக லண்டன் நீதிமன்றம் மறுப்பு!

நிரவ் மோடி (கோப்புப்படம்)
நிரவ் மோடி (கோப்புப்படம்)
Loading...

லண்டன்: நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு ஜாமின் வழங்க 3-வது முறையாக லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. ஆனால், அவர் நாட்டை விட்டு கடந்த ஆண்டே வெளியேறி விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், நிரவ் மோடியின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பொருட்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

nirav modi

மேலும், அவரை நாடு கடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். லண்டனின் வாண்ட்ஸ்வொர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.

nirav modi

இதையடுத்து, தனக்கு ஜாமின் கோரி லண்டன் நீதிமன்றத்தில் நிரவ் மோடி மனுத் தாக்கல் செய்தார். ஆனால், அவருக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், அவரை மே 24-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, இரண்டு முறை அவரது ஜாமின் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், தற்போது மூன்றாவது முறையாக அவருக்கு ஜாமின் வழங்க லண்டன் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதையும் வாசிங்க

முன்னாள் முதல்வர் மகன் கொலை வழக்கில் மனைவி அதிரடி கைது: 90 நிமிடங்களில் தடயங்களை அழித்தது அம்பலம்!

2018 TopTamilNews. All rights reserved.