• November
    21
    Thursday

Main Area

Main



பூனைக்கு மணி கட்டிய பிரான்ஸ்! கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி!

டிஜிட்டல் நிறுவனங்கள்
டிஜிட்டல் நிறுவனங்கள்

கூகுள், ஆப்பிள், அமேசான், ஆப்பிள் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் பிரான்சில் நல்ல வருமானத்தை ஈட்டுகின்றன. ஆனால், அந்நாட்டு அரசுக்கு அந்நிறுவனங்களால் வருவாய் ஆதாயம் இல்லை. மேலும் வரி விதிப்பு இடைவெளியை குறைக்க  கூகுள் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு முடிவு செய்தது. இந்த தகவலை அறிந்த  உடனேயே வழக்கம் போல் அமெரிக்க அதிபர் டொனால்ட் குதிக்க ஆரம்பித்து விட்டார்.

டிரம்ப்

இருந்தாலும் பிரான்ஸ் அதனை கொண்டுவில்லை. இந்நிலையில், கூகுள் போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதிக்க அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்பட்டது. இதனையடுத்து அமேசான், கூகுள், ஆப்பிள் போன்ற நிறுவனங்களுக்கு டிஜிட்டல் வரி விதிக்கப் போகும் முதல் நாடு என்ற பெருமையை பிரான்ஸ் தட்டி சென்றது.

பிரான்ஸ்

அமேசான், கூகுள், ஆப்பிள் மற்றும் பேஸ்புக் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் பிரான்ஸ் வாடிக்கையாளர்களிடமிருந்து சம்பாதிக்கும் வருவாயில் 3 சதவீதத்தை டிஜிட்டல் வரியாக பிரான்ஸ் அரசுக்கு செலுத்த வேண்டும். வரியை அமல்படுத்துவதற்கு முன்பே குதி குதின்னு குதித்தவர் டிரம்ப். தற்போது வரி விதிப்பு நடைமுறைக்கு வந்துள்ளதால் அவரின் கோபத்தை பிரான்ஸ் அரசு எப்படி சமாளிக்க போகிறது என்பது தெரியவில்லை. மேலும், டிஜிட்டல் வரிக்கு பழிவாங்கும் நோக்கில் டிரம்ப் பிரான்சில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கவாய்ப்புள்ளது.

2018 TopTamilNews. All rights reserved.