• August
    25
    Sunday

Main Area

Main



நாலாவது இடத்துக்கு நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க‌

 இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி
Loading...

ஐபிஎல் ஊர்வலம் முடிந்து உலககோப்பை திருவிழா வரவிருக்கிறது. பங்கேற்கும் வீரர்கள் பட்டியல் வெளியானபோது எழுந்த சர்ச்சை இன்னும் துவங்கவில்லை. தன்னுடைய இடத்தைப் பிடித்த (பறித்த) விஜய் சங்கரை மறைமுகமாக ராயுடு 3டி கிளாஸ் என நையாண்டி செய்தது, ரிஷப் பண்ட் விடுபட்டது, என ஒருவேளை இந்தியா தோற்றால் அதற்கு இவைதான் காரணம் என இப்போதே ரைட்டப்போடு காத்திருக்கும் முன்னாள் வீரர்கள் என சர்ச்சைகள் பலவிதம்.

vijayshankar and rayudu

கி.பி. மூன்றாம் நூற்றாண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணியை தொடர்ந்து இம்சித்து வரும் அந்த கேள்வி நான்காவது இடத்துக்கு சரியான நபர் யார் என்பதுதான். பல்வேறு சோதனை முயற்சிகளுக்குப் பிறகு இறுதிகட்டத்தில், நாலாவது இடத்துக்கு ரிஷப் பண்ட் - தினேஷ் கார்த்திக் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் வந்தபோது, தினேஷ் கார்த்திக்  இறுதிச்சுற்றில் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் ரிஷப்பைவிட தினேஷ் எந்தவகையில் சிறந்தவர் என்ற கேள்விக்கான பதிலை அளித்திருக்கிறார் கோலி. நெருக்கடியான சூழ்நிலைகளில் பண்ட்டைவிட தினேஷ் கார்த்திக் திறம்பட செயல்பட்டிருக்கிறார், அது  மட்டுமல்லாமல், ஒருவேளை தோனிக்கு ஏதேனும் அடிபட்டால், மாற்று விக்கெட் கீப்பராகவும் கார்த்திக்தான் சரியான தேர்வு என்று தெரிவித்துள்ளார்.

rishabh pant and dinesh karthik

உலககோப்பை மாதிரியான பெரிய போட்டிகளில் இருக்கும் அபாயம் என்னவென்றால், தோல்வி அடைந்தாலும் அரை இறுதி அல்லது இறுதி போட்டிவரை சென்று தோற்றால் சேதாரம் கம்மி. ஆனால், ஏதோவொரு காரணத்தால் தகுதிச்சுற்றை தாண்ட முடியாமல் தோற்று வெளியேறினால், கோலிக்கு டீமில் இடம் இருக்கும் ஆனால் பேருக்கு முன்னாடி கேப்டன் என்ற வார்த்தை இருக்காது. விளையாட்டுத்தனமா விளையாடாதீங்க‌ மக்கா

2018 TopTamilNews. All rights reserved.