kaappan-mobile kaappan-large
  • September
    22
    Sunday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலை!

விபி சந்திரசேகர்
விபி சந்திரசேகர்
Loading...

சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வி.பி.சந்திரசேகரின் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

vbc

வக்கடை பிக்சேஸ்வரன் சந்திரசேகர்  பொறியியல் பட்டதாரியான இவர்  தமிழக மற்றும் இந்திய அணிக்காக கிரிக்கெட் போட்டியில்  விளையாடியுள்ளார். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற  அவர் அதன் பிறகு பயிற்சியாளர், வர்ணனையாளர், ஆலோசகர் என பன்முகத்தன்மையுடன் விளங்கினார். குறிப்பாக இவர்  தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இடம்பெற்றுள்ள காஞ்சி வீரன்ஸ் அணியின் உரிமையாளர் ஆவார். 

vbc

இந்நிலையில் சென்னை மயிலாப்பூரில் உள்ள தனது வீட்டில் விபி சந்திரசேகர் நேற்று இரவு தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் அறையிலிருந்து அவர் வெளியே வராததால்  சந்தேகமடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது அவர் இறந்து கிடந்ததைப்  பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

vbc

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவில் வழக்குப் பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபி சந்திரசேகர் நிதி நெருக்கடியால்  தற்கொலை செய்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தொடர்ந்து அவரது செல்போனை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். 

முன்னதாக ஐபிஎல் கிரிக்கெட் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு  தோனியை முதன்முதலில் ஏலம்  எடுத்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

2018 TopTamilNews. All rights reserved.