• February
    29
    Saturday

Main Area

Mainஆரோக்கியத்தைக் காக்கும் ஆவாரம் பூக்கள்!

ஆவாரம் பூக்கள்
ஆவாரம் பூக்கள்

பூக்களில் எத்தனையோ வகைகள் உண்டு. ஆனால், நமக்குத் தெரிந்த மல்லி, கனகாம்பரம், முல்லை, சாமந்தியைத் தவிர மற்றப் பூக்களை எல்லாம் மறந்து விட்டோம். யாராவது மூச்சு விடாமல், நூறு பூக்களின் பெயர்களைப் பட்டியலிட்டு சொன்னால், கைதட்டி, வாய்பிளந்து ரசிக்கும் நிலைக்கு நம் வாழ்க்கை சென்று விட்டது எல்லாம் காலக்கொடுமை தான்.

flower

பூக்களை வெறும் அலங்காரப் பொருளாக மட்டுமே  பார்த்து வளர்கிற தலைமுறை இன்று உருவாகி வருகிறது. ஒவ்வொரு பூக்களிலுமே எண்ணற்ற மருத்துவ குணங்கள் இருக்கின்றன என்பதை நாமும் மறந்து விட்டோம். அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்ல தவறிவிட்டோம். 
‘ஹைபிஸ்கஸ்’ என்றால் என்னவென்று சொல்லும் குழந்தைகளுக்கு செம்பருத்திப் பூவின் குணமும், மருத்துவ பலன்களையும் சொல்ல தெரிவதில்லை. இன்று பூக்களின் நறுமணங்களை சோப்புக்கட்டிகளில் சேர்க்கப்படும் எஸென்ஸ்களில் அனுபவிக்கிறோம்.
அப்படி இயற்கையாய் கிடைத்து வந்த பூக்களில் பல அதிசயங்களைக் கொண்டது தான் ஆவாரம் பூ. 
‘ஆவாரை பூத்திருக்க... சாவாரை கண்டதுண்டோ!’ என்கிற ஒற்றை வரி சொல்லும் ஆவாரம் பூக்களின் அற்புத குணங்களை. எவ்வளவு வறட்சி வந்தாலும் ஆவாரை செடி தன்னிச்சையாக, செழிப்பாக வளரக்கூடியது. ஆவாரையின் பூ, காய், பட்டை, வேர், இலை என ஐந்து உறுப்புகளும் சேர்ந்து ஆவரைப் பஞ்சாங்கம் என்று அழைக்கப்படுகிறது. 

flower

எண்ணற்ற பலன்களைத் தரும் ஆவாரம் பூவின் மருத்துவ குணங்களைத் தெரிந்து வைத்திருந்தாலே நீங்கள் அதிர்ஷ்டசாலி தான். வறண்ட தரிசு நிலங்களிலும், வயல் வரப்புகளிலும் வளர்ந்து பொன் மஞ்சள் நிறத்தில் பூத்துக் குலுங்கும் அழகை பார்க்கும் போதே அத்தனை ஆனந்தத்தைக் கொடுக்கும்.
இந்த ஆவாரை பூக்களை தினம் ஒரு டீ ஸ்பூன் அளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய், உடல் சோர்வு, அடங்காத தாகம், தூக்கம் இன்மை உடல் இளைத்தல் இவை அனைத்திற்கும் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
குழந்தையின்மை பிரச்னை உள்ள பெ‌ண்க‌ள் கருப்பட்டியுடன் ஆவாரம் பூவை சேர்த்து உ‌ண்டு வ‌ந்தா‌ல், பெ‌ண்களு‌க்கு மல‌ட்டு‌த் த‌ன்மை ‌நீ‌ங்கு‌ம். ‌விரை‌வி‌ல் க‌ர்‌ப்ப‌ம் தரிக்கும்.
உடல்சூடு, தோல் வறட்சி நீங்கி பலம் பெற ஆவாரை பூச்சூரணத்தை பாலில் கலந்து குடித்துவர வேண்டும். மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கை கட்டுப்படுத்த 20 கிராம் ஆவாரைப் பட்டையைப் பொடி செய்து அதை தண்ணீரில் போட்டு காலை, மாலை வேளைகளில் குடித்துவர வேண்டும்.

flower

தோல் அரிப்பு ஏற்பட்டால் ஆவாரம் பூவினை அரைத்து வெந்நீர் கலந்து, உடம்பில் தேய்த்து ஊற வைத்து சிறிது நேரம் கழித்துக் குளித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும்.
சிலருக்கு உடலில் கற்றாழை நாற்றம் வீசும். அவர்கள் ஆவாரம் பூவை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் வீசும் கற்றாழை நாற்றம் நீங்கும். 
ஆவாரம் பூ, கொழுந்து, ஆவாரம் பட்டை, வேர் இவற்றை சம அளவு எடுத்து அரைத்து, இவற்றுடன் சுத்தமான பசு நெய் கலந்து சூரணமாக செய்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர உள் மூலம் சரியாகும். இனி... ஆவாரம் பூக்களைப் பார்த்தால், ரசித்து செல்லாமல், பயன்படுத்த துவங்குங்கள்!

2018 TopTamilNews. All rights reserved.