• March
    30
    Monday

Main Area

Main



முதல் டெஸ்ட் போட்டி: இந்திய அணி திணறல் – மழையால் ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது

india new zeland
india new zeland

வெல்லிங்டன்: முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 122-5 என்று இந்திய அணி திணறி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரின் ஐந்து போட்டிகளையும் வென்று நியூசிலாந்து அணியை இந்தியா துவம்சம் செய்து தொடரைக் கைப்பற்றியது. இதையடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி, டி20 தொடரில் பெற்ற தோல்விக்கு இந்திய அணியை நியூசிலாந்து பழி தீர்த்தது. இந்த நிலையில், இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் இவ்விரு அணிகளும் விளையாடி வருகின்றன.

அந்த வகையில், முதல் டெஸ்ட் போட்டி இன்று வெல்லிங்டனில் உள்ள பேசின் ரிசர்வ் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 122 ரன்கள் எடுத்து திணறி வருகிறது. அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 34 ரன்களும், ரஹானே 38 ரன்களும் (நாட்-அவுட்) எடுத்தனர். கேப்டன் விராட் கோலி 2 ரன்னில் அவுட்டானார். நியூசிலாந்து தரப்பில் அதிகபட்சமாக கைல் ஜாமிசன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இந்த நிலையில், மழை காரணமாக 55 ஓவர்களுடன் முதல் நாள் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது.

2018 TopTamilNews. All rights reserved.