• November
    19
    Tuesday

Main Area

Main



லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் முதல் இந்தி படம் ! வரலாற்றை மாற்றிய பாகுபலி !

bahubali
bahubali

இந்தியாவில் ரூ.2,500 கோடி ஈட்டித் தந்த பாகுபலி படம் தற்போது லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் திரையிடப்பட்டது.

இந்தி மொழியில் திரையிடப்பட்ட பாகுபலி படம் மற்றவர்களுக்கு புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கிலத்தில் சப் டைட்டிலும் போடப்பட்டது. லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹாலில் இதுவரை ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி படமும் திரையிடப்பட்டது கிடையாது. முதன் முதலில் இந்தி மொழியில் ஒரு திரைப்படம் திரையிடப்பட்டது ஒட்டுமொத்த இந்தியர்களுக்கு கிடைத்த அங்கீகாரம். இந்த நிகழ்ச்சியில் எஸ்.எஸ்.ராஜமெளலி, பிரபாஸ், அனுஷ்கா, ராணா உள்ளிட்டோர் பங்கேற்று படத்தை கண்டு ரசித்தனர்.

bahubali2

பாகுபலி திரைப்படம் 2015 மற்றும் 2017ம் ஆண்டில் 2 பகுதிகளாக வெளியானது. இந்திய வரலாற்றுத் திரைப்படத்தை இராஜமௌலி இயக்கியிருந்தார். பாகுபலி படம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெயியானது. ரம்யா கிருஷ்ணன், பிரபாஸ், ரானா தக்குபாடி, அனுஷ்க்கா, சத்தியராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். 3-டி (முப்பரிமாண) தொழில்நுட்பத்தில் 250 கோடி செலவில் உருவான இந்த படம் சுமார் 2,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித் தந்துள்ளது.

bahubali

 

2018 TopTamilNews. All rights reserved.