• August
    24
    Saturday

Main Area


பாண்டிச்சேரி ஃபர்னிச்சர்

பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் பாண்டிச்சேரி ஃபர்னிச்சர்! நிஜமா...பித்தலாட்டமா…!

மக்கள் செல்வத்தில் புரண்டு தேக்கு கட்டில்கள்,மகோகனி ஃபர்னிச்சர்கள், கருங்காலி கைத்தடிகள் என்று அசல் ஃபிரஞ்சுக்காரனை போலவே வாழ்ந்திருக்க வேண்டும்.ஆனால்,துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளையும்...


valentine day dress colour

2019 ஆம் ஆண்டு காதலர் தினத்துக்கான டிரஸ் கலர்களும் அதற்கான அர்த்தமும்...

ஆண்டுதோறும் பிப்ரவரி 14 தேதியை உலனம் முழுவதும் காதலர் தினமாக்க கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம். எப்போது பிப்ரவரி 14 வரும் அப்போது நம் காதலை சொல்லலாம் என்று நிறைய இளைஞர்கள் காத்துக் க...

குளுகுளு குளிருக்கு என்ன உடை அணியலாம்..?

குளிர் காலம் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் கதகதப்பான ஆடைகளை அணிய விரும்புவார்கள். வெப்பநிலைகள் மாறி மாறி வரும் சூழலில் தற்போது குளுகுளு குளிர்காலம் தொடங்கிவிட்டது. குளிர் காலத்திற்கு ஏற்றவாறு எப்படி பட்ட ஆடைகள் அணிய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

கோட்

குளிர் கால உடைகளில் மிக முக்கியமானது கோட். கடும் குளிரில் உங்களை கதகதப்பாக வைக்கவும், குளிர் காற்று வீசாமலும் இருப்பது போன்ற ஓவர் கோட்களை அணியலாம். குறிப்பாக வட்டர் ப்ரூஃப் கோட்களை வாங்கிக் கொண்டால் அதனை மழைக் காலங்களிலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தொப்பி

குளிர் காலங்களில் உடலின் பெரும்பகுதி வெப்பத்தை தலை வழியாகவே இழக்கிறோம். கதகதப்பான தொப்பி அணிவது இந்த வெப்ப இழப்பைத் தடுக்கிறது. கதகதப்பான குளிர்காலத் தொப்பிகள் கம்பளி, ஆட்டுத் தோள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்படுகிறது. இது தலையையும் காதுகளையும் மூடுவதால், குளிரின் தாக்கத்தில் இருந்து எளிதாக எஸ்கேப் ஆகலாம்.

winter

ஹெட்பேண்ட்

காதுகளை மூடுவதற்கு ஹெட் பேண்ட் அல்லது இயர் மஃப் போன்றவற்றை அணியலாம். காதுகளை கண்டிப்பாக மூடிப் பாதுகாக்க வேண்டும், குறிப்பாக குளிர்காற்று வீசும்போது இவ்வாறு செய்ய வேண்டும், ஏனென்றால் காதுகளில் குளிர் காற்றினால் பனிக்கடி ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இதனால் சளி, இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படக் கூடும்.

கையுறைகள் அல்லது மிட்டன்ஸ்

கைகளும், விரல்களும் விரைவில் குளிர்ச்சி பெறக்கூடியவை. பெருவிரலைத் தனியாகவும், மற்ற விரல்களை ஒன்றாகவும் மூடக்கூடிய மிட்டன்ஸ் அல்லது, தனித்தனி விரல்களை செருகக்கூடிய குளவ்ஸ்களை பயன்படுத்தலாம். இது உங்கள் கைகளை கதகதப்பாக வைக்க உதவும். விரல்கள் ஒன்றுடன் ஒன்று படுவதால் வெப்பம் தரும் என்பதால் கையுறைகளை விட மிட்டன்கள் அதிக கதகதப்புத் தரக்கூடியவை.

winter

சாக்ஸ், பூட்ஸ்

சாக்ஸ் அல்லது பூட்ஸ் பாதங்களை கதகதப்பாகவும் உலர்வாகவும் வைக்கின்றன. இதில் லோ-கட் காலணிகள் என்பவை கணுக்கால் வரை மூடக்கூடியவை. ஹை-கட் காலணிகள் என்பவை முழங்கால் வரை மூடுபவை. சில மூடுகாலணிகள் வாட்டர் ப்ரூஃப் உள்ளதாக இருக்கும். மிருதுவான கம்பளியால் ஆன கால் உரைகளையும் உபயோகிக்கலாம்.

நாகரிகம்

மிகக் கடுமையான குளிர் நாட்களில் பெரும்பாலான மக்கள் குளிர் காலத்தில் அணியக் கூடிய ஆடைகளை நாகரிகம் கருதி தவிர்த்துவிடுவார்கள். கோட், தொப்பி, கையுறைகள், பூட்ஸ் என பலவற்றை போட்டுக் கொண்டால் உங்களை யாரும் ஜோக்கராக நினைக்க மாட்டார்கள். அவை அனைத்தும் குளிரில் இருந்து உங்களை பாதுகாக்கும் கவசங்கள் என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

amirthavarshini Thu, 12/13/2018 - 18:02
Winter Winter Costume Winter dress Cold temperature Weather Lifestyle Fashion winter ஃபேஷன்

English Title

How to Dress for Winter Season

News Order

2
2018 TopTamilNews. All rights reserved.