kaappan-mobile kaappan-large
  • September
    18
    Wednesday

Main Area

Main

kaappan-mobile kaappan-large


பிரபல கார் பந்தய ஜாம்பவான் மரணம்!

நிக்கி லௌடா
நிக்கி லௌடா
Loading...

பிரபல கார் பந்தய வீரரும் ஜாம்பவானும் ஆகிய ஆஸ்திரிய நாட்டை சேர்ந்த நிக்கி லௌடா நேற்று (மே 20) மரணம் அடைந்தார். கார் பந்தய வட்டாரத்தைச் சேர்ந்த பலரும் அவரது மரணத்திற்கு தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

laudaniki

1949 ஆம் ஆண்டு ஆஸ்திரிய நாட்டில் உள்ள வியன்னா வில் பிறந்த நிக்கி லௌடா, கார் பந்தய உலகில் தனக்கென தனி அங்கீகாரத்தை பதித்துள்ளார். இன்றைய கார் பந்தய வீரர்களால் இன்றளவும் இவர் போற்றப்படும் ஒருவராக திகழ்கிறார் என்றால் கார் பந்தய விளையாட்டில் இவர் நிகழ்த்திய சாதனைகள் அந்த அளவிற்கு மிக உயரிய ஒன்று.

கார் பந்தய விளையாட்டுகளில் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக வீரராகவும் பயிற்சியாளராகவும் மேலாளராகவும் இவர் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்ற ஒன்றாக உள்ளது. 

lauda


 
முதன்முதலாக வங்கி கடன் மூலம் ஃபார்முலா 3 வகை பந்தயங்களில் கலந்து கொண்டு, சிறப்பாக செயல்பட்டதனால் ஃபார்முலா 2 வகை போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு மற்றும் உதவிகள் கிடைத்தது. 

அதன் பின் 1971 ம் ஆண்டு தனது முதல் ஃபார்முலா 1 போட்டியில் நிக்கி, ஆஸ்திரேலிய பந்தயத்தில் மார்ச் அணிக்காக பங்கேற்றார். 1973 ஆம் ஆண்டு 5ஆம் இடம் பேற்றார்.

lauda

1974ஆம் ஆண்டு ஃபெராரி அணியில் இணைந்த நிக்கி , 1975ஆம் ஆண்டு கார் பந்தய ஓட்டுனர்களுக்கான பந்தயத்திலும் ஃபெராரி அணிக்காக முதல் சாம்பியன் பட்டம் பெற்றார். 

1976 ஆம் ஆண்டு தீவிர விபத்தில் இவரது உடல் மிகவும் பாதிக்கப்பட்டது. அதன் பிறகு மெல்ல மெல்ல தேறி வந்த இவர் 1977ஆம் ஆண்டு கார் பந்தயத்தில் ஃபெராரி அணிக்காக தனது இரண்டாவது சாம்பியன் பட்டத்தை வென்றார். 1979 ஆம் ஆண்டு ஃபெராரி அணியில் இருந்து திடீரென தனது ஓய்வு முடிவை அறிவித்து வெளியேறினார்.

niki lauda

ஆனால், தீவிர பயிற்சியில் இருந்த நிக்கி, 1982 ஆம் ஆண்டு தனது ஓய்வு முடிவை திரும்பப் பெற்று மெக்லாரன் அணிக்கு கார் பந்தயத்தில் பங்கேற்றார். 1984 ஆம் ஆண்டு ஃபார்முலா 1 பந்தயத்தில் தனது 3வது சாம்பியன்ஸ் பதக்கத்தை பெற்று அசத்தினார்.

1985 ஆம் ஆண்டு தனது தொழிலை கவனித்துக்கொள்ள நிக்கி  முழுவதுமாக ஓய்வு பெற்றார். பிறகு 1990களில் ஃபெராரி அணியின் ஆலோசகராகவும் 2000களின் ஆரம்ப காலத்தில் ஜாகுவார் அணியின் முதல்வராகவும் பணியில் இருந்தார்.

lauda

2012 ஆம் ஆண்டு மெர்சிடஸ் அணியின் முதல்வராக பதவி வகித்து வந்த நிக்கி, அணியின் மிகப்பெரிய வளர்ச்சி முக்கிய காரணமாக திகழ்ந்தார். 

இவருக்கு கடந்த ஆண்டு நுரையீரல் அறுவை சிகிச்சை நடைபெற்று இரு மாத காலம் மருத்துவமனையில் ஓய்வில் இருந்தார். அதன் பிறகு ஏப்ரல் மாதம் துவக்கத்தில் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் நேற்று நிக்கி உயிர் பிரிந்தது என குடும்பத்தார் அனைவருக்கும் தெரியப் படுத்தினார். இதை அறிந்த கார் பந்தய உலகில் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

2018 TopTamilNews. All rights reserved.