• August
    26
    Monday

Main Area

Main



வாக்காளர் பட்டியலில் இந்த நடிகர்கள் பெயரெல்லாம் மிஸ்ஸிங்! பிரபலங்களுக்கே இந்த நிலமையா!?

சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன்
Loading...

சென்னை: சென்னையில் வாக்காளர் பட்டியலில் சில முக்கிய நடிகர்களின் பெயர்கள் இல்லாதா காரணத்தினால் வாக்களிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. அதன்படி, முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த 10-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து  தமிழகம்  உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்கு 18-ம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகின்றது.

சரியாக காலை 7 மணிக்குத் தொடங்கிய வாக்குப்பதிவில்  ஏராளமான பொதுமக்கள் வரிசையில் காத்திருந்து தங்கள் வாக்கினைச் செலுத்தினர். அந்த வரிசையில் மக்களோடு மக்களாய் பிரபல நடிகர்கள் மற்றும் நடிகைகள் வாக்களித்து வருகின்றனர். 

இந்நிலையில் திரை பிரபலங்கள் பலரும் வாக்களித்து வரும் நிலையில், சில பிரபலங்கள் தங்களது வாக்கினை செலுத்த முடியாத, சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் காரணத்தினால் நடிகர் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர் மற்றும் ரமேஷ் கண்ணா ஆகியோர் வாக்களிக்க முடியவில்லை.

முன்னதாக ஆந்திர மாநிலத்தின் தேர்தல் நடைபெற்ற போது அப்போலோ தலைவர் பிரதாப் ரெட்டியின் மகள் ஷோபனா காமினேனிக்கும் இது போன்று சூழல் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

இதையும் படிங்க: பிரபல சின்னதிரை நடிகைகள் கார் விபத்தில் பலி: சோகத்தில் திரையுலகம்!

2018 TopTamilNews. All rights reserved.