சிஏஏவுக்கு எதிராக போராடிய 16 முஸ்லீம்களை கொன்று குவித்த உ.பி. அரசு!  | Tamil News | Latest Online Tamil News | Tamil News Live | Tamilnadu News | தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்- Top Tamil News
  • February
    19
    Wednesday

Main Area

Mainசிஏஏவுக்கு எதிராக போராடிய 16 முஸ்லீம்களை கொன்று குவித்த உ.பி. அரசு! 

CAA Protest
CAA Protest

கடந்த மாதம் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம்கள் கொன்று குவிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மாணவர்கள் முதல் பொதுமக்கள் வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் காவல்துறையினர் தடியடி நடத்தினர். இந்த தாக்குதலில் ஏராளமான மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்நிலையில் உத்திரபிரதேசத்திலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடந்தது. போராட்டத்தில் போராட்டக்காரர்கள் மற்றும் காவல்துறையினர் இடையே மோதல் ஏற்பட்டு வன்முறை வெடித்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் பாதிக்கு மேல் முஸ்லீம்கள் என்றும், அவர்கள் பயங்கரவாதிகள் என்றும் அம்மாநில அரசு அறிவித்தது. 

CAA protest

உத்திர பிரதேசத்தில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராடியவர்களின் மீது பழிக்குப்பழி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்தார். அவர் அறிவித்த அடுத்த நாளில் மட்டும் 16 முஸ்லீம்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இந்த கொலைகளுக்கு எந்தவித பொறுப்பும் ஏற்காமல் உத்திர பிரதேச அதிகாரிகள் தொடர்ந்து மறுத்துவருகின்றனர். அப்பாவி மக்கள் மீது பொய்யான வழக்குகளை பதிந்து கைது செய்ததுடன், தொடர்ந்து தாக்குதலிலும் உ.பி. காவல்துறையினர் ஈடுபட்டனர். 

2018 TopTamilNews. All rights reserved.